இந்தியாவுக்கு பாகிஸ்தான் பாடம் எடுப்பது விமர்சிக்கத்தக்கதே: ஐ.நா. கூட்டத்தில் இந்தியா பதிலடி

இந்தியாவில் மனித உரிமைகள் மீறப்படுவதாக பாகிஸ்தான் அமைச்சரின் கருத்துக்கு ஐக்கிய நாடுகள் கூட்டத்தில் இந்திய தூதரக அதிகாரி பதிலடி
இந்தியாவுக்கு பாகிஸ்தான் பாடம் எடுப்பது விமர்சிக்கத்தக்கதே: ஐ.நா. கூட்டத்தில் இந்தியா பதிலடி
Published on
Updated on
1 min read

இந்தியாவில் மனித உரிமைகள் மீறப்படுவதாக பாகிஸ்தான் அமைச்சரின் கருத்துக்கு ஐக்கிய நாடுகள் கூட்டத்தில் இந்திய தூதரக அதிகாரி பதிலளித்தார்.

ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கவுன்சிலின் கூட்டத்தில், பாகிஸ்தான் மனித உரிமைகள் துறை அமைச்சர் அசாம் நசீர் ``காஷ்மீரில் வசிக்கும் மக்கள் சுயமாக முடிவெடுக்கும் உரிமை, அவர்களுக்கு தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. ஐ.நா.வின் தீர்மானங்கள் மற்றும் சர்வதேச சட்டங்கள் தொடர்ந்து மீறப்படுவதுடன், மனித உரிமைகளும் மீறப்படுகிறது. இதனை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்” என்று கூறினார்.

இதனையடுத்து, ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர தூதரகத்தின் பிரதிநிதியான க்ஷிதிஜ் தியாகி, காஷ்மீர் பிரச்னையை ஐ.நா. அவையில் மீண்டும் மீண்டும் எழுப்புவதற்காக பாகிஸ்தானை விமர்சித்தார்.

தொடர்ந்து, தியாகி கூறியதாவது ``பாகிஸ்தானின் ஆதாரமற்ற, போலியான இவ்வாறான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க வேண்டியுள்ளது. பாகிஸ்தானின் ராணுவ பயங்கரவாதத்தினர் எழுதிக் கொடுக்கும் பொய்களை பரப்பும் பாகிஸ்தான் அதிகாரிகளைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது.

ஜம்மு - காஷ்மீரில் பல தசாப்தங்களாக பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டு வந்த பகுதிகளில், இயல்பு நிலையை கொண்டுவருவதற்காக, கடந்த சில ஆண்டுகளாக பொருளாதார வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஜனநாயகம், முன்னேற்றத்தை உறுதி செய்வதில்தான் இந்தியா கவனம் செலுத்துகிறது.

ஐ.நா.வால் அறிவிக்கப்பட்ட பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிக்கும் பாகிஸ்தானில்தான் மனித உரிமை மீறல்கள் அதிகம் நடக்கிறது. அத்தகைய நாட்டினர் இந்தியாவுக்கு பாடம் எடுக்க அவசியம் இல்லை.

இந்தியா மீதான ஆதாரமற்ற கருத்துக்குப் பதிலாக, பாகிஸ்தான் தனது சொந்த மக்களுக்கு நீதி வழங்குவதில் கவனம் செலுத்த வேண்டும். சர்வதேச உதவிகளில் உயிர்வாழும் ஒரு தோல்வியுற்ற அரசு, இந்த ஐ.நா. அவையின் நேரத்தை, தொடர்ந்து வீணடிப்பது விமர்சிக்கத்தக்கதே’’ என்று பதிலளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com