அமைச்சர்களுக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் கதி? மு.க. ஸ்டாலின்வணிகரீதியாக பயன்படுத்தப்படும் குடியிருப்புகளுக்கு சீல்! உச்சநீதிமன்றம்திரைப்பட தயாரிப்பு ஒப்பந்தம் வழக்கு! நடிகர் ராஜ்கிரணுக்கு முன்ஜாமீன்!நிர்மல்குமார் கலந்துகொண்ட மதுரை அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மின்வெட்டு!மின் கட்டணக் கணக்கீட்டுப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது: சிபிஐ வலியுறுத்தல்!நான் முடி வெட்டிக்கொண்டால்கூட பிரச்னையா? - மேயர் பிரியா ஆதங்கம்!ஸ்குவாஷ் விளையாட்டில் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த வீரர்களுக்கு ரூ. 60 லட்சம்! முதல்வர் அறிவிப்புவேலை நிறுத்தம் எதிரொலி! நாளை வழக்கம் போல வங்கிகள் செயல்படும்!

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு!

2024 -25 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டைவிட, மூன்றாவது காலாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு

Published On :

இந்தியாவின் மொத்த நாட்டு உள்நாட்டு உற்பத்தி அதிகரித்திருப்பதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் அறிக்கையில் தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டின் 2-வது காலாண்டில் 5.6 சதவிகிதமாக இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி, மூன்றாவது காலாண்டில் 6.2 சதவிகிதமாக அதிகரித்ததாக தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இருப்பினும், அதற்கு முந்தைய காலாண்டில் (2023 -24) இதே காலகட்டத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 9.5 சதவிகிதமாக இருந்தது. மேலும், நிதியாண்டில் இது 6.4 சதவிகிதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் தரவுகளின் அடிப்படையில், ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான நிகர அந்நிய முதலீடு சுமார் 1.2 பில்லியன் டாலராக குறைந்துள்ளது. ஆனால், அதற்கு முந்தைய ஆண்டில் இதே காலகட்டத்தில் இது 7.8 பில்லியன் டாலராக இருந்தது.

'சுதந்திரத்தின் நூற்றாண்டு விழாவான 2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும்' என்று பிரதமர் நரேந்திர மோடியின் `வளர்ந்த இந்தியா’ இலக்கை அடைய சுமார் 8 சதவிகித மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி அவசியமானது என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.