சாலைத் திட்ட ஊழல் குற்றச்சாட்டு: ஞானேஷ் குமாருக்கு எதிராக விசாரணை: கேரள அரசு உத்தரவு!தொகுதிப் பங்கீட்டைவிட வெற்றியே முக்கியம்: அகிலேஷ் யாதவ் திட்டவட்டம்!தயார் நிலையில் காய்ச்சல் வார்டுகள்: மருத்துவமனைகளுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை உத்தரவுஜிஎஸ்டி அதிகாரிகளுக்கு கைது அதிகாரம் நீக்கம்? அக். 7 கவுன்சில் கூட்டத்தில் பரிசீலிக்க வாய்ப்பு!

2026-க்கு பிறகு மோடி அரசு நீடிக்காது: சஞ்சய் ரெளத்

மத்தியில் மோடி தலைமையிலான அரசு நீடிக்காது என்று சிவசேனை எம்பி பேட்டி..

சஞ்சய் ரெளத் - ANI

Published On :

2026-க்கு பிறகு மோடி தலைமையிலான மத்திய அரசு நீடிக்காது என்று சிவசேனை (உத்தவ் அணி) எம்.பி. சஞ்சய் ரெளத் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

மும்பையில் இன்று செய்தியாளர்களுடன் பேசிய சஞ்சய் ரெளத் தெரிவித்ததாவது:

“தற்போதைய மத்திய அரசு 2026-க்கு பிறகு நீடிக்குமா என்ற சந்தேகம் எனக்குள் உள்ளது. தனது ஆட்சி காலத்தை மோடி நிறைவு செய்யமாட்டார் என்று நினைக்கிறேன். மத்தியில் ஆட்சி கலைந்தால், அது மகாராஷ்டிர அரசியலிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

மும்பை மாநகராட்சித் தேர்தலுக்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. பீட் மாவட்டத்தில் நடைபெற்ற கொலை சம்பவத்தில் மாநில அமைச்சருக்கு தொடர்புண்டு. சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு குழு அமைக்கப்பட வேண்டும். முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் இந்த விவகாரத்துக்கு பொறுப்பேற்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

மகாராஷ்டிர மாநிலம், பீட் மாவட்டத்தில் இயங்கி வரும் காற்றாலை நிறுவனத்திடம் சமீபத்தில் பணம் கேட்டு ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

காற்றாலை நிறுவனத்துக்கு ஆதரவாக இந்தப் பிரச்னையில் தலையிட்டு பேசிய சந்தோஷ் தேஷ்முகி என்பவர் டிசம்பர் 9 ஆம் தேதி கொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.