6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

10 ஆண்டுகளாக தில்லிக்கு எந்த உதவியும் பிரதமர் செய்யவில்லை: கேஜரிவால்

கடந்த 10 ஆண்டுகளாக தில்லிக்கு எந்தவித உதவிகளையும் பிரதமர் செய்யவில்லை என ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

News image
அரவிந்த் கேஜரிவால்
Updated On :3 ஜனவரி 2025, 2:39 pm

DIN

கடந்த 10 ஆண்டுகளாக தில்லிக்கு எந்தவித உதவிகளையும் பிரதமர் செய்யவில்லை என ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

முன்னதாக பிரதமரின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள அவர், கடந்த 10 ஆண்டுகளில் ஆம் ஆத்மி செய்த சாதனைகளை சொல்ல பல மணி நேரம் ஆகும். கல்வி, சுகாதாரம், குடிநீர், சாலை என ஏராளமான வேலைகளை ஆம் ஆத்மி அரசு செய்துள்ளது. ஒழுங்காக வேலை செய்வோர் குறை சொல்ல மாட்டார்கள். குறை சொல்வோர் வேலை செய்ய மாட்டார்கள்.

ஏதாவது வேலை செய்திருந்தால் தில்லி மக்களை பிரதமர் குறை சொல்லியிருக்க மாட்டார். 10 ஆண்டுகளில், பாஜக தில்லியில் குறிப்பிடத்தக்க எதையும் செய்யவில்லை. 2022-க்குள் அனைவருக்கும் நிரந்தர வீடுகள் என்று அவர்கள் வாக்குறுதி அளித்தனர், ஆனால் ஐந்து ஆண்டுகளில் 4,700 வீடுகளை மட்டுமே கட்டியுள்ளனர்.

நீங்கள் பாஜகவுக்கு வாக்களித்திருந்தால், அவர்கள் தில்லியில் உள்ள அனைத்து குடிசைப் பகுதிகளையும் அழித்திருப்பார்கள். பேரிடரில் தில்லி இல்லை. உண்மையான பேரிடரே பாஜகதான். இவ்வாறு அவர் குறிப்பிட்டார். தலைநகர் தில்லியில் நகர்ப்புற மறுசீரமைப்பு திட்டம் உள்பட பல திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று(ஜன. 3) தொடங்கிவைத்தார்.

அப்போது பேசிய மோடி, 'தில்லி பேரிடரில் உள்ளது. ஆம் ஆத்மி ஊழலில் ஈடுபட்டு வருகிறது. வேலைவாய்ப்புகளில், ஏழை மக்களுக்கான நிதியில், பள்ளி குழந்தைகளுக்கான நிதியில் அவர்கள் ஊழல் செய்து வருகிறார்கள். ஆம் ஆத்மியை ஆட்சியில் இருந்து விடுவிக்க தில்லி மக்கள் முடிவு செய்துவிட்டனர்' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.