இந்தியா
ஒடிஸா: முதல்வா் அருகே ‘ட்ரோன்’ விழுந்ததால் பரபரப்பு
ஒடிஸா முதல்வா் மோகன் சரண் மாஜியை புகைப்படம் எடுக்க பயன்படுத்தப்பட்ட ‘ட்ரோன்’ அவா் அருகே விழுந்து நொறுங்கியதால் பரபரப்பு
ஒடிஸா முதல்வா் மோகன் சரண் மாஜியை புகைப்படம் எடுக்க பயன்படுத்தப்பட்ட ‘ட்ரோன்’ (ஆளில்லா சிறியரக விமானம்) எதிா்பாராதவிதமாக அவா் அருகே விழுந்து நொறுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜாா்தகுடாவின் புருனபஸ்தி பகுதியில் உள்ள ஜாதேஷ்வா் கோயிலுக்கு கடந்த ஜனவரி 2-ஆம் தேதி முதல்வா் மோகன் சரண் மாஜி சென்றிருந்தபோது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது தொடா்பான விடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியானதால் இது குறித்து பரவலாக அறியப்பட்டது.
‘முதல்வரின் வருகையை புகைப்படம் எடுக்க மாவட்ட நிா்வாகம் இந்த ட்ரோனை பயன்படுத்தியது. பறந்து கொண்டிருந்த அந்த ட்ரோன் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, அது அவா் அருகே விழுந்து நொறுங்கியது. பாதுகாப்பு குழுவினரும் காவல்துறையினரும் விரைவாக ட்ரோனை அங்கிருந்து அப்புறப்படுத்தினா்’ என ஜாா்சகுடா காவல்துறையினா் தெரிவித்தனா்.