சென்னை போக்சோ நீதிமன்றத்தில் வீரமணி ஆஜர்!அரிசி விலை உயர்வு இன்னும் ஆட்சியாளர்களின் காதுகளுக்கு எட்டவில்லை போலும்! பெ. சண்முகம்பெரம்பூர் தொகுதியில் முதல்வர் விஜய்! மக்களிடம் மனுக்களைப் பெற்றார்!மாதவரம் ஆவின் பால் பண்ணை ஆய்வகக் கட்டடத்தை திறந்து வைத்தார் முதல்வர் விஜய்!ராகுல், பிரியங்கா மீது தில்லி காவல்துறை வழக்குப்பதிவு!ரெப்போ வட்டி விகிதம் 5.50% ஆக உயர்வு! வீட்டு, வாகன கடன் வட்டி அதிகரிக்க வாய்ப்பு!‘தவெக ஆட்சியில் மின்வெட்டை மிஞ்சும் அரிவாள் வெட்டு’ - மு.க. ஸ்டாலின் கண்டனம்

பாட்னாவில் பிரசாந்த் கிஷோர் கைது

பாட்னாவில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரசாந்த் கிஷோரை கைது செய்யும் காவலர்கள்.

Published On :

பாட்னாவில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திங்கள்கிழமை அதிகாலை அவர் கைது செய்யப்பட்டதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவரையும் அவரது ஆதரவாளர்களையும் போராட்ட இடத்தில் இருந்து அப்புறப்படுத்தினர். கிஷோரின் ஆதரவாளர்களின் கூற்றுப்படி, போலீஸார் அவரை மருத்துவ பரிசோதனைக்காக பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பிடிஐயிடம் பேசிய பாட்னா மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சிங், “ காந்தி மைதானத்தில் உண்ணாவிரத்தில் ஈடுபட்டிருந்த கிஷோரையும் அவரது ஆதரவாளர்களையும் திங்கள்கிழமை காலை போலீஸார் கைது செய்தனர். அவர்கள் இப்போது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள்.

அவர்களின் உண்ணாவிரதம் சட்டவிரோதமானது. தடைசெய்யப்பட்ட தளத்திற்கு அருகில் போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர் என்றார். பிகாரில் நடைபெற்ற அரசுப் பணியாளர் தேர்வாணயத்தின் முதல் நிலைத் தேர்வு டிச. 13ஆம் தேதி நடைபெற்றது.

இதில் வினாத்தாள்களை குறிப்பிட்ட மையங்களிம் மட்டும் தாமதமாகக் கொடுத்தது உள்ளிட்ட முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தேர்வர்கள் வலியுறுத்தி வந்தனர்.

Story image

மாநில அரசைக் கண்டித்து தேர்வாணையத்தை நோக்கி பேரணியில் ஈடுபட்டனர். தொடர் போராட்டங்களுக்கு மத்தியில், டிச. 30ஆம் தேதி ஆணையத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட தேர்வர்களை காவல் துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்தன.

பிகார் அரசின் இத்தகைய நடவடிக்கையைக் கண்டித்து பாட்டாவில் உள்ள காந்தி திடலில் தேர்வர்கள், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு அளித்துவந்த ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர், தேர்வர்களுக்கு ஆதரவாக உரிய நீதி கிடைக்க வேண்டி பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் கடந்த 2ஆம் தேதி முதல் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.