தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

புதுச்சேரியில் மேலும் ஒரு குழந்தைக்கு எச்எம்பிவி தொற்று!

புதுச்சேரியில் மேலும் ஒரு குழந்தைகள் எச்எம்பிவி தொற்று இருப்பது பற்றி..

News image

எச்எம்பிவி வைரஸ் தொற்று!

படம்: IANS

Updated On :13 ஜனவரி 2025, 6:51 am

DIN

புதுச்சேரியில் மேலும் ஒரு குழந்தைக்கு ஹியூமன் மெட்டாப்நியூமோவைரஸ் (எச்எம்பிவி) பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு, ஜிப்மரில் சிகிச்சை பெற்று வருவதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கரோனா பெருந்தொற்றுக்கு அடுத்ததாக சீனாவிலிருந்து குழந்தைகளைத் தாக்கக் கூடிய எச்எம்பிவி தொற்று உலகம் முழுவதும் பரவி வருகிறது.

இதுதொடர்பாக புதுச்சேரி சுகாதாரத் துறை இயக்குநர் வி.ரவிச்சந்திரன் வெளியிட்ட அறிக்கையில்,

பெண் குழந்தை காய்ச்சல், இருமல், சளி போன்ற பிரச்னைகளால் சில நாள்களுக்கு முன்பு ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில், குழந்தையின் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து சிறுமிக்கு எச்எம்பிவி தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. குழந்தை தற்போது நலமுடன் இருப்பதாகவும், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

முன்னதாக புதுச்சேரியில் கடந்த வாரம் முதல் எச்எம்பிவி தொற்று ஐந்து வயது சிறுமிக்குப் பதிவானதையடுத்து, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறுமி பூரண குணமடைந்து சனிக்கிழமை வீடு திரும்பினார்.

புதுச்சேரி நிர்வாகம் வைரஸின் சூழலில் அனைத்து நடவடிக்கைகளையும் தயார் செய்துள்ளது என்று இயக்குநர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.