
ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலில் திருமலை பிரசாதம் வழங்கும் லட்டு கவுண்டரில் திடீரென தீ விபத்து நேரிட்டது.
உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருப்பதி ஏழுமலையான் கோயில் வளாகத்தில் இயங்கி வரும் லட்டு பிரசாதம் விநியோகம் செய்யும் மையத்தில் இன்று காலை திடீரென தீப்பற்றி எரிந்தது.
லட்டு வழங்கும் மையத்தின் 47ஆம் எண் கவுண்டரில் யுபிஎஸ்சியில் கோளாறு ஏற்பட்டு திடிரென தீப்பற்றி எரிந்தது. இதனைப் பார்த்ததும் லட்டு வாங்க வரிசையில் காத்திருந்த பக்தர்கள் வெளியே அலறி அடித்துக்கொண்டு ஓடினார்கள்.
உடனடியாக விரைந்து சென்ற ஊழியர்கள், யுபிஎஸ்சியில் பற்றிய தீயை அணைத்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.