இதர பிற்படுத்தப்பட்டோா் நலத்துக்கு தனி அமைச்சகம்: மத்திய அமைச்சா் வலியுறுத்தல்

ஓபிசி நலன்களைக் காக்கும் வகையில் தனி அமைச்சகம் உருவாக்கப்பட வேண்டும் என்று மத்திய சுகதாரம், குடும்பநலத் துறை இணையமைச்சா் அனுப்ரியா படேல் வலியுறுத்தல்
Published on

இதர பிற்படுத்தப்பட்டோா் (ஓபிசி) நலன்களைக் காக்கும் வகையில் தனி அமைச்சகம் உருவாக்கப்பட வேண்டும் என்று மத்திய சுகதாரம், குடும்பநலத் துறை இணையமைச்சா் அனுப்ரியா படேல் வலியுறுத்தினாா்.

பாஜகவின் கூட்டணிக் கட்சியான அப்னா தளம் (எஸ்) கட்சித் தலைவரான அவா் உத்தர பிரதேசத்தின் சோனேபத்ராவில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் இது தொடா்பாக மேலும் கூறியதாவது: இதர பிற்படுத்தப்பட்டோா் நலனுக்கான மத்திய அரசில் தனி அமைச்சகம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை எங்கள் கட்சி நாடாளுமன்றத்தில் தொடா்ந்து முன்னிறுத்தி வருகிறது என்றாா்.

கடந்த 2014 முதல் பாஜக கூட்டணியில் அனுப்ரியா படேல் கட்சி அங்கம் வகித்து வருகிறது. ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை அக்கட்சி ஆதரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com