காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

அக்‌ஷர் படேல் பிளேயிங் லெவனில் இடம்பெற வேண்டும்: ரவி சாஸ்திரி

டி20 உலகக் கோப்பைத் தொடரில் ஜிம்பாப்வேவுக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் அக்‌ஷர் படேல் சேர்க்கப்பட வேண்டும்.

News image

படம் | AP

Updated On :25 பிப்ரவரி 2026, 4:52 pm IST

டி20 உலகக் கோப்பைத் தொடரில் ஜிம்பாப்வேவுக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் அக்‌ஷர் படேல் சேர்க்கப்பட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் சூப்பர் 8 சுற்று ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்திய அணி சூப்பர் 8 சுற்றில் அதன் முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவிடம் மோசமான தோல்வியைத் தழுவியது.

சூப்பர் 8 சுற்றின் மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது. சென்னை சேப்பாக்கம் திடலில் நாளை (பிப்ரவரி 26) நடைபெறும் மிக முக்கியமான ஆட்டத்தில் இந்திய அணி ஜிம்பாப்வேவை எதிர்கொள்கிறது.

ரவி சாஸ்திரி

ரவி சாஸ்திரி - கோப்புப் படம்

இந்த நிலையில், சூப்பர் 8 சுற்றில் ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் அக்‌ஷர் படேல் சேர்க்கப்பட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியிருப்பதாவது: இந்திய அணி தொடர்ச்சியாக 12 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் தோல்வியடைந்து அதிர்ச்சியளித்துள்ளது. இந்திய அணிக்கு இந்தத் தோல்வி ஒரு முன்னெச்சரிக்கையாக அமைந்துள்ளது. அணியில் உள்ள வீரர்கள் காம்பினேஷன் குறித்து இந்திய அணி நிர்வாகம் சிந்திக்க வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தோல்விக்குப் பிறகு இந்திய அணிக்கு மிகப் பெரிய பாடம் கிடைத்திருக்கும். சூப்பர் 8 சுற்றில் இனி வரும் போட்டிகளை அவர்கள் எளிதாக எடுத்துக் கொள்ளப் போவதில்லை. இன்னும் ஒரு போட்டியில் தோல்வியடைந்தால், இந்திய அணியின் அரையிறுதி கனவு நிறைவேறாமல் போகலாம்.

ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் அக்‌ஷர் படேல் மீண்டும் இடம்பெற வேண்டும். அவரது அனுபவம் அணிக்குத் தேவைப்படும். அக்‌ஷர் படேல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் என இருவருடனும் இந்திய அணி களமிறங்கலாம். இதன் மூலம், அணிக்கு கூடுதல் பந்துவீச்சு தெரிவு கிடைக்கும். ஒருவரின் பந்துவீச்சு சரியாக அமையவில்லையென்றால், மற்றொருவரை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்திய அணியில் பந்துவீச்சு தெரிவுகள் அதிகம் இருப்பது நல்லது. ஏனெனில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரானப் போட்டியில் வருண் ஓவரில் அதிக ரன்கள் குவிக்கப்பட்டது போல் மீண்டும் சூழல் உருவாகினால், கூடுதல் பந்துவீச்சு தெரிவு உதவியாக இருக்கும் என்றார்.

Summary

Axar Patel should be included in the Indian team's playing eleven for the Super 8 round match against Zimbabwe in the T20 World Cup.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.