சென்னையில் பதுக்கி வைத்திருந்த 40 சிலிண்டா்கள் பறிமுதல்!புனேவில் 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவர்!மணிப்பூரில் 23 சட்டவிரோத பதுங்கு குழிகளை அழித்த பாதுகாப்புப் படையினர்!தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் பேசுபொருளாகும் ஜோதிமணி ட்வீட்!கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புமேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

சயீஃப் அலிகான் வீட்டுக்குள் வெளிநபர் நுழைந்தது எப்படி?

சயீஃப் அலி வீட்டுக்குள் வெளிநபர் நுழைந்தது எப்படி என்ற தகவல் வெளியானது.

News image
Updated On :16 ஜனவரி 2025, 9:44 am

நடிகர் சயீஃப் அலிகான் வீட்டுக்குள் நுழைந்த வெளிநபர், கத்தியால் குத்தியதில், அவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்டது யார், அவர் எப்படி வீட்டுக்குள் நுழைந்தார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாலிவுட் நடிகர் சயீஃப் அலி கான் வீட்டுக்குள் வெளிநபர் ஒருவர், நுழைய முயன்றதை அவரது வீட்டுப் பணியாளர் தடுத்தபோது, அங்கே வந்த நடிகர் சயீஃப் அலிகானை, குற்றவாளி மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்திய சம்பவத்தில் அவருக்கு உடலில் 6 இடங்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளன.

நள்ளிரவு 2 மணியளவில் கத்திக்குத்து காயங்களுடன் சயீஃப் அலிகான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உடனடியாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அவரது உடலில் இரண்டு மோசமான காயங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

54 வயதாகும் நடிகரின் வீடு, பாந்த்ராவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் 11வது மாடியில் அமைந்துள்ளது.

நேற்று நள்ளிரவு வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையனால் சயீஃப் அலிகான், கத்தியால் குத்தப்பட்டதும், அவரது மகன், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி அங்கிருந்து தப்பியோடியிருக்கிறார்.

கொள்ளையன், அந்த வீட்டின் அவசரகால பயன்பாட்டுக்கான படிகட்டு வழியாக நேற்று இரவு அவரது வீட்டுக்குள் ஏறி வந்திருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். வீட்டுப் பணியாளர் அவரைப் பார்த்து யார் என்று கேட்டபோது தகராறு ஏற்பட்டு, பணியாளரைத் தாக்க முயன்றபோது அதனைத் தடுக்கச் சென்ற சயீஃப் அலிகானை, குற்றவாளி கத்தியால் குத்தியதாகவும் கூறப்படுகிறது.

குற்றவாளி வீட்டுக்குள் கொள்ளையடிக்கும் நோக்கத்தோடு நுழைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து வழக்குப் பதிவு செய்து, 10 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் கூறியிருக்கிறார்கள்.

அவரது முதுகெலும்பில் கத்திக்குத்து காயம் ஏற்பட்டிருந்ததாகவும், உடனடியாக அவருக்கு அறுவைசிகிச்சை செய்து, முதுகெலும்பில் குத்தப்பட்டிருந்த 2.5 இஞ்ச் கத்தித் துண்டு அகற்றப்பட்டதாகவும், தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.