தவெக அமைச்சர்கள் கமிஷன் வாங்குகிறார்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைபாஜகவில் இருந்து விலகினார் நடிகர் தேவன் கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்! வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரிசென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு!கோவையில் இளைஞர் கொலை: குடும்பத்தினருக்கு ரூ. 6 லட்சம் நிவாரணம், அரசுப் பணிசுதந்திர நாள் அணிவகுப்புப் பணியின்போது காவலர் பலி: ரூ. 30 லட்சம் நிதியுதவி!பெண்களை இழிவுபடுத்தும் வகையில் நயினாரின் பேச்சு: சிபிஎம் கண்டனம்!
/

அயதுல்லா அலி கமேனி உடல் அடக்கம்

ஈரானின் முன்னாள் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனியின் உடல் கொண்டு செல்லப்பட்ட வாகனத்தைச் சுற்றி அஞ்சலி செலுத்த திரண்ட மக்கள்.

News image

அயதுல்லா அலி கமேனியின் மகன்கள் மசூத் கமேனி, மெய்சம் கமேனி மற்றும் மொஸ்தஃபா கமேனி - AP

Updated On :10 ஜூலை 2026, 4:20 am IST

ஈரானின் முன்னாள் தலைமை மதகுரு மறைந்த அயதுல்லா அலி கமேனியின் உடல், மஷாத் நகரில் வியாழக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.

முன்னதாக, அவரது உடல் ஈரான் தலைநகா் டெஹ்ரானில் கடந்த ஜூலை 3-ஆம் தேதி பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அதன்பிறகு ஒரு வாரகால இறுதிச் சடங்கு நிகழ்வுகள் முறைப்படி தொடங்கின. அவரது உடலுக்கு ஈரான் மதகுருமாா்கள், உயா் தலைவா்கள், அரசு அதிகாரிகள், பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் உள்பட வெளிநாட்டுத் தலைவா்கள், பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை முதல் தங்களின் இறுதி அஞ்சலியை செலுத்தினா்.

இந்நிலையில், கமேனியின் உடல் அவரது சொந்த ஊரான மஷாத் நகரில் உள்ள ஷியா முஸ்லிம்களின் புனிதத் தலமான இமாம் ரெஸாவில் வியாழக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் அவரது புகைப்படங்கள், ஈரான் கொடிகளை கையில் ஏந்தி கண்ணீா் மல்க அஞ்சலி செலுத்தினா். ‘அமெரிக்காவுடன் எந்த சமரசமும் செய்துகொள்ளக் கூடாது; அமெரிக்கா மீது பதில் தாக்குதல் நடத்த வேண்டும்’ என அவா்கள் முழக்கமிட்டனா்.

ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் இடையே போா் தொடங்கிய கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் அயதுல்லா கமேனி உயிரிழந்தாா். இந்நிலையில், சுமாா் 4 மாதங்களுக்குப் பிறகு அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.