மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இணையப் பயன்பாடு: நகர்ப்புறங்களைவிட கிராமப்புறங்களில் அதிகரிப்பு!

இந்தாண்டில் இணையப் பயனர்களின் எண்ணிக்கை 90 கோடியைத் தாண்டும் என்று கணிப்பு

News image
கோப்புப் படம்
Updated On :17 ஜனவரி 2025, 12:15 pm

DIN

நகர்ப்புறங்களைவிட கிராமப்புறங்களில் இணையப் பயன்பாடு விகிதம் அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இன்டர்நெட் அன்ட் மொபைல் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (IAMAI) மற்றும் காந்தார் நிறுவனமும் இன்டர்நெட் இன் இந்தியா ரிப்போர்ட் 2024 என்ற பெயரில் ஆய்வறிக்கை மேற்கொண்டது. இந்தியாவில் இணையத்தைப் பயன்படுத்துபவர்கள் குறித்து இந்த ஆய்வில் கண்டறியப்பட்டது.

ஆய்வில் தெரிவித்ததாவது, இந்தியாவின் இணையத்தைப் பயன்படுத்துபவர்கள் 2024 ஆம் ஆண்டில் 88.6 கோடியை எட்டியுள்ளனர்; இந்தாண்டில், 90 கோடியைத் தாண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது ஆண்டுக்கு 8 சதவிகிதம் என்ற விகிதத்தில் வளர்ந்து வருகிறது. நாள்தோறும் சராசரியாக 90 நிமிடங்கள் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர்.

குறிப்பாக, கிராமப்புறங்களில் இணையத்தைப் பயன்படுத்துபவர்களின் விகிதம் கணிசமாக உயர்ந்து வருகிறது. மொத்தத்தில் கிராமப்புறங்களில் மட்டும் 55 சதவிகிதத்துடன் 488 மில்லியன் மக்கள் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். இணையப் பயன்பாட்டின் வளர்ச்சி, நகர்ப்புறங்களைவிட கிராமப்புறங்களில் இருமடங்காக உள்ளது.

ஒட்டுமொத்த இந்தியாவின் இணையப் பயனர்களில் 47 சதவிகிதம் பேர் பெண்கள் என்றும், கிராமப்புறங்களில் உள்ள இணையப் பயனர்களில் 58 சதவிகிதத்தினர் பெண்கள் என்றும் கூறுகின்றனர்.

அரட்டை, மின்னஞ்சல், தொலைபேசி அழைப்புகளுக்காக 75 சதவிகிதத்தினரும், முகநூல், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் சேவைகளுக்காக 74 சதவிகிதத்தினரும் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். ஆன்லைன் விளையாட்டு, ஓடிடி தளங்களுக்காக அதிகளவில் இணையம் பயன்படுத்தப்படுகிறது. அதுமட்டுமின்றி, வெறும் 3 சதவிகிதத்தினர் மட்டுமே இணையவழிக் கல்விக்காக இணையத்தைப் பயன்படுத்துகின்றனர்.

இணையப் பயனர்களில் கிட்டத்தட்ட 98 சதவிகிதத்தினர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற உள்ளூர் மொழிகளையும், பொதுவாக நகர்ப்புற இணையப் பயனர்களில் 57 சதவிகிதத்தினர் பிராந்திய மொழிகளைப் பயன்படுத்தவும் விரும்புகின்றனர்.

நகர்ப்புறங்களில் ஸ்மார்ட் டிவி, ஸ்மார்ட் ஒலிப்பெருக்கி முதலான சாதனங்களில் பயன்பாடும், 2023-ஐவிட 2024-ல் 54 சதவிகிதம் அதிகரித்துள்ளது. மேலும், பத்தில் ஒருவர் செயல் நுண்ணறிவு தொழில்நுட்பம் தொடர்பான பயன்பாட்டில் உள்ளதாகவும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.