நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

நடிகை ஹேமமாலினிக்கு உஸ்தாத் குலாம் முஸ்தஃபா கான் விருது

News image

நடிகை ஹேமமாலினிக்கு ‘உஸ்தாத் குலாம் முஸ்தஃபா கான்’ விருதை வழங்கிய ஏ.ஆா்.ரஹ்மான். உடன் மகாராஷ்டிர அமைச்சா் ஆசிஷ் ஷெலாா்.

Updated On :20 ஜனவரி 2025, 2:34 am IST

மறைந்த பழம்பெரும் இசைக் கலைஞா் உஸ்தாத் குலாம் முஸ்தஃபா கான் நினைவு நாளையொட்டி மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகையும் பாஜக எம்.பி.யுமான ஹேமமாலினிக்கு அவரது பெயரிலான நினைவு விருது வழங்கப்பட்டது.

பாரம்பரிய ஹிந்துஸ்தானி இசைக் கலைஞரான உஸ்தாத் குலாம் முஸ்தஃபா கான், ஆஷா போஸ்லே, ஏ.ஆா். ரஹ்மான், சோனு நிகம், ஹரிஹரன், ஷான், ஷில்பா ராவ் உள்ளிட்ட இசை பிரபலங்களுக்கு குரு ஆவாா். இவரது கலைச்சேவையைப் பாராட்டி பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண், சங்கீத நாடக அகாதெமி விருது உள்ளிட்ட உயரிய விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளன.

இவரது நினைவு நாளையொட்டி மும்பையில் ‘ஹாஸ்ரி’ இசை நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், மும்பையின் பாந்த்ராவில் உள்ள ‘ஜியோ’ பன்னாட்டு அரங்கில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகை ஹேமமாலினிக்கு ‘பத்ம விபூஷன் உஸ்தாத் குலாம் முஸ்தஃபா கான்’ விருது வழங்கப்பட்டது.

இந்திய கலை மற்றும் கலாசாரத்தில் ஆற்றிய ஈடு இணையற்ற பங்களிப்பை அங்கீகரித்து, ஹேமா மாலினிக்கு இசையமைப்பாளா் ஏ.ஆா்.ரஹ்மான் இந்த விருதை வழங்கினாா்.

மகாராஷ்டிர மாநில தகவல் தொழில்நுட்பம் மற்றும் கலாசார விவகாரங்களுக்கான அமைச்சா் ஆசிஷ் ஷெலாா் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கிரிக்கெட் வீரா் சச்சின் டெண்டுல்கரின் மனைவி அஞ்சலி டெண்டுல்கா், மகள் சாரா டெண்டுல்கா், இயக்குநா் ஹன்சல் மேத்தா, நடிகா்கள் ஷரத் கேல்கா், கீா்த்தி கேல்கா் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் பங்கேற்றனா்.

விருதளிக்கும் விழாவைத் தொடா்ந்து, ஏ.ஆா்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ரஹ்மான் பல்வேறு சூஃபி பாடல்களைப் பாடி, தனது குருவுக்கு அஞ்சமரியாதை செலுத்தினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.