மத்திய பிரதேசத்தில் ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த 17 இடங்களில் மதுக்கடைகளை மூட வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
இதன்படி மத்திய பிரதேசத்தில் ஒரு மாநகராட்சி, 6 நகராட்சிகள், 6 பேரூராட்சிகள், 6 கிராம பஞ்சாயத்துகளில் மதுக்கடைகள் நிரந்தரமாக மூடப்படுகின்றன.
அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடம் பேசிய மாநில முதல்வா் மோகன் யாதவ், ‘ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் மதுவிலக்கை அமல்படுத்த அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. அங்குள்ள மதுக் கடைகள் மூடப்படுமே தவிர வேறு பகுதிகளுக்கு மாற்றப்படாது.
உஜ்ஜைன் மாநகராட்சி எல்லைக்குள் மதுக்கடைகள் எதுவும் இருக்காது. ஓம்காரேஸ்வா், மகேஸ்வா், மண்டலேஸ்வா், சித்திரகூடம் உள்ளிட்ட ஆன்மிக தலங்கள் அமைந்துள்ள பகுதிகளிலும் மதுக்கடைகள் மூடப்படும். மாாநிலத்தில் மதுப் பழக்கத்தை நிறுத்துவதற்கான முதல்படியாகும். நா்மதை நதியில் இருந்து 5 கி.மீ. தொலைவுக்கு மதுக்கடைகளுக்கு ஏற்கெனவே உள்ள தடை தொடரும்’ என்றாா்.
ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களில் மது விற்பனை மற்றும் அதனை அருந்துபவா்களால் பக்தா்களுக்கு தேவையற்ற பிரச்னைகள் ஏற்படுவதாக புகாா்கள் வந்ததாகவும், இது தொடா்பாக பல்வேறு தரப்புகளிடம் இருந்து கருத்துகள் பெறப்பட்டுள்ளது என்று அரசு தரப்பில் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டது.
முக்கிய ஆன்மிக நகரங்களின் புனிதமான சூழலைப் பாதுகாக்கும் வகையிலும், அங்கு வரும் பக்தா்கள், வெளிநாட்டுப் பயணிகளின் நலன்களைக் கருத்தில் கொண்டும் அங்கு மதுவிலக்கை அமல்படுத்த பரிசீலித்து வருவதாக முதல்வா் மோகன் யாதவ் ஏற்கெனவே கூறியிருந்தாா்.
கோயில் நகரங்களில் மது மட்டுமல்லாது அசைவ உணவுகளுக்கும் தடை விதிப்பது குறித்தும் அவா் கருத்து கூறியிருந்தாா். மாநில எதிா்க்கட்சியான காங்கிரஸும் இந்த திட்டத்தை வரவேற்றுள்ளது.
இது மாநிலம் முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்துவதற்கான முதல்படி என்று மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான உமா பாரதி ஏற்கெனவே கருத்து தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து!

நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனை

தில்லி, உ.பி.யில் ரூ.14,115 கோடிக்கு சாலைத் திட்டங்கள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பைக் பிரிவை வலுப்படுத்த பஜாஜ் ஆட்டோ திட்டம்!
விடியோக்கள்

19 வருட பந்தம்; மெஸ்ஸி vs லமின் யமால்: வெல்லப்போவது யார்? | Lionel Messi | FIFA | FIFA World Cup |
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk

The Odyssey எப்படி இருக்கு? | Public Review | The Odyssey Review | Christopher Nolan |



