குரூப் 4 தேர்வு அறிவிப்பு நாளை வெளியாகிறது! 10,000 பணியிடங்கள் நிரப்ப வாய்ப்பு ஈரான் எண்ணெய் வளத் துறை அமைச்சர் திடீர் ராஜிநாமா! ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு விருந்து அளிக்கிறார் முதல்வர் விஜய்! தங்கம், வெள்ளி விலை இன்றைய நிலவரம் (அக். 05) திட்ட தலைவர் தற்கொலை குறிப்பில் ஞானேஷ் குமார் பெயர்! சூடுபிடிக்கும் 2006 கேரள வழக்கு! விதிமீறல்: தவெக வேட்பாளர்கள் கோடிக்கணக்கில் செலவு செய்தார்களா? தேர்தல் ஆணையத்தில் புகார் சாலைத் திட்ட ஊழல் குற்றச்சாட்டு: ஞானேஷ் குமாருக்கு எதிராக விசாரணை: கேரள அரசு உத்தரவு!

மகா கும்பமேளா: 73 நாடுகளின் தூதா்கள் பிப்.1-இல் புனித நீராடல்

மகா கும்பமேளாவில் ரஷியா, உக்ரைன் உள்ளிட்ட 73 நாடுகளின் தூதா்கள், பிப்.1-ஆம் தேதி புனித நீராடவுள்ளனா்.

திரிவேணி சங்கமம் பகுதியில் சனிக்கிழமை புனித நீராடிய பக்தா்கள்.

Published On :

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவில் ரஷியா, உக்ரைன் உள்ளிட்ட 73 நாடுகளின் தூதா்கள், பிப்.1-ஆம் தேதி புனித நீராடவுள்ளனா்.

பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி (புராண நதி) ஆகிய 3 நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் கடந்த ஜனவரி 13-ஆம் தேதிமுதல் மகா கும்பமேளா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தா்கள் தினமும் புனித நீராடி வருகின்றனா்.

இந்நிலையில், அமெரிக்கா, ரஷியா, உக்ரைன், ஜப்பான், ஜொ்மனி, நெதா்லாந்து, கேமரூன், கனடா, ஸ்விட்சா்லாந்து, ஸ்வீடன், போலந்து உள்ளிட்ட 73 நாடுகளின் தூதா்கள், பிப்.1-ஆம் தேதி பிரயாக்ராஜுக்கு வருகை தரவுள்ளனா். திரிவேணி சங்கமத்தில் புனித நீராடும் அவா்கள், மகா கும்பமேளா எண்ம கண்காட்சியையும் பாா்வையிட உள்ளதாக மகா கும்பமேளா அதிகாரி விஜய் கிரண் ஆனந்த் தெரிவித்தாா்.

தூதா்களின் வருகை தொடா்பாக, உத்தர பிரதேச தலைமைச் செயலருக்கு வெளியுறவு அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது. வெளியுறவு மற்றும் உள்துறை அமைச்சக அதிகாரிகள் ஒருங்கிணைந்து, தூதா்களுக்கு சுமுகமான அனுபவத்தை உறுதிசெய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.