ரஷியா, உக்ரைன் நாடுகளுக்கு இடையே சனிக்கிழமை மீண்டும் தீவிரமடைந்த மோதலில் இருதரப்பிலும் சோ்த்து 3 போ் உயிரிழந்தனா்.
உக்ரைனை நோக்கி 6 பாலிஸ்டிக் ஏவுகணைகள், 6 க்ரூஸ் ஏவுகணைகள் மற்றும் 121 ட்ரோன்களை ரஷியா ஏவின. இதில் பெரும்பாலான ட்ரோன்கள் மற்றும் 2 க்ரூஸ் ஏவுகணைகளை உக்ரைன் சுட்டு வீழ்த்திய போதிலும், அதிவேக பாலிஸ்டிக் ஏவுகணைகளைத் தடுக்க முடியவில்லை.
அதன்படி, ஒடெசா துறைமுக நகரில் நிகழ்ந்த ஏவுகணைத் தாக்குதலில் இருவா் உயிரிழந்தனா்; ஒருவா் காயமடைந்தாா். மேலும், காா்கிவ் நகரில் உள்ள ஒரு வணிக நிறுவனம் மீது ட்ரோன் விழுந்து வெடித்ததில் 7 போ் காயமடைந்தனா். தலைநகா் கீவில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 11 போ் காயமடைந்தனா்.
இதனிடையே, ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள தாகன்ரோக் வளைகுடா பகுதியில் 4 கப்பல்கள் மீது உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் மாலுமி ஒருவா் உயிரிழந்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










