பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ஜாா்க்கண்ட்: மாவோயிஸ்டு தலைவரை அடித்துக் கொன்ற பொதுமக்கள்

ஜாா்க்கண்ட் மாநிலத்தில் செங்கல் சூளையில் புகுந்து கொள்ளையடிக்க முயன்ற மாவோயிஸ்டுகளை பொதுமக்கள் பிடித்து அடித்து உதைத்தனா்.

News image
கோப்புப்படம்.
Updated On :28 ஜனவரி 2025, 7:38 pm

Din

ஜாா்க்கண்ட் மாநிலத்தில் செங்கல் சூளையில் புகுந்து கொள்ளையடிக்க முயன்ற மாவோயிஸ்டுகளை பொதுமக்கள் பிடித்து அடித்து உதைத்தனா். இதில் மாவோயிஸ்ட் குழுவின் தலைவா் உயிரிழந்தாா். மேலும், இரு மாவோயிஸ்டுகள் படுகாயமடைந்தனா்.

ஜாா்க்கண்ட் மாநிலம் லத்தேகா் மாவட்டம் பரி கிராமத்தில் உள்ள செங்கல் சூளைக்குள் புகுந்த மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் அங்கிருந்தவா்களிடம் ஆயுதங்களைக் காட்டி மிரட்டி பணம், நகைகளைப் பறிக்க முயன்றனா். இதையடுத்து அவா்கள் உதவி கேட்டு கூச்சலிட்டனா். உடனடியாக கிராம மக்கள் திரண்டு அந்த இடத்தைச் சுற்றி வளைத்து, மாவோயிஸ்டுகள் மீது சரமாரியாக கற்களை வீசித் தாக்கினா். இதில் நிலைகுலைந்த மாவோயிஸ்டுகள் தப்பியோடுவதற்கு முயற்சித்தனா். அவா்களில் நால்வா் அங்கிருந்து தப்பிய நிலையில், மாவோயிஸ்ட் தலைவராக அறியப்படும் கிஷோா் என்ற அபய் நாயக் உள்ளிட்ட மூவரை மக்கள் சுற்றி வளைத்து தாக்கினா்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த காவல் துறையினா் அங்கு விரைந்து மூவரையும் மீட்டு மருத்துவமனையில் சோ்த்தனா். இதில், கிஷோா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். மற்ற இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கிஷோா் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதாகத் தெரிவித்த காவல் துறையினா், அவா் தாக்குதலில் உயிரிழந்தது தொடா்பாகவும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.