கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

பட்ஜெட்: அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கியது!

தில்லியில் பிரதமர் மோடி தலைமையிலான அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று(ஜன. 30) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

News image

பிரதமர் நரேந்திர மோடி (கோப்புப் படம்)

Updated On :30 ஜனவரி 2025, 6:03 am

DIN

மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்கவுள்ளதையடுத்து தில்லியில் பிரதமர் மோடி தலைமையிலான அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று(ஜன. 30) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

2025-26 ஆம் நிதியாண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், குடியரசுத் தலைவர் உரையுடன் நாளை(ஜன. 31) தொடங்கவுள்ளது.

மக்களவையில் ஜன. 31(வெள்ளிக்கிழமை) அன்று காலை 11 மணிக்கு, இரு அவை உறுப்பினர்கள் கலந்துகொள்ளும் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையாற்றுகிறார்.

பிப்ரவரி 1 ஆம் தேதி(சனிக்கிழமை) 2025-26 ஆம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படு்கிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

கூட்டத்தொடரின் முதல் அமர்வு பிப்ரவரி 13 ஆம் தேதி நிறைவடைகிறது. இரண்டாம் அமர்வு மார்ச் 10 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 4 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்திருந்தது.

அதன்படி, தில்லியில் பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

பாஜக, காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், சமாஜவாதி, பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் சார்பில் முக்கிய எம்.பி.க்கள் இதில் கலந்துகொண்டுள்ளனர்.

அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், கிரண் ரிஜுஜு, காங்கிரஸ் எம்.பி.க்கள் கௌரவ் கோகோய், சுரேஷ், திமுக எம்.பி. டி.ஆர். பாலு, திரிணமூல் காங்கிரஸின் சுதிப் பந்தோபாத்யாய், டெரெக் ஓ பிரையன் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டுள்ளனர்.

மத்திய பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அறிவிப்புகள், எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

மேலும், இந்த கூட்டத்தொடரில் வக்ஃப் வாரிய திருத்த மசோதா, 'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதா உள்ளிட்ட 62 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.