சிறப்பு எழுத்துருக்கள் இருக்கும் யுபிஐ ஐடிகளின் பணப்பரிவர்த்தனைகள் நிராகரிக்கப்படுவதாகக் கூறிய இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தின் அறிவிப்பு நாளைமுதல் அமலுக்கு வருகிறது.
இணையவழியான பணப்பரிவர்த்தனையில் முன்னணியில் இருக்கும் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகத்திற்கு (UPI) இந்தியாவில் சில்லறை கொடுப்பனவுகள் மற்றும் தீர்வு முறைகளை இயக்கும் பொதுத்துறை நிறுவனமான இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) ஜனவரி 9 ஆம் தேதியில் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது.
அதன்படி, யுபிஐ ஐடிகளில் சிறப்பு எழுத்துருக்கள் (Special Characters) இருப்பின், அந்த ஐடிகளின் பணப்பரிவர்த்தனை பிப்ரவரி முதல் தேதியில் இருந்து நிராகரிக்கப்படும் என்று கூறியிருந்தது. யுபிஐ ஐடிகளில் இருக்கும் #, @, $, *, ! போன்ற சிறப்பு எழுத்துருக்களை மாற்றினால், பணப்பரிவர்த்தனையில் எந்தவித சிக்கலும் இருக்காது என்றும் கூறியது.
ஆன்லைன் பணப்பரிவர்த்தனைக்கு பயன்படுத்தும் எந்த செயலியானாலும், அதிலுள்ள யுபிஐ ஐடிக்களில் 26 ஆங்கில எழுத்துக்கள் மற்றும் 0 முதல் 9 வரையிலான எண்கள் மட்டுமே இருக்கும்படி பார்த்து கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.
கூடுதல் தகவல்களாக, கடந்தாண்டு டிசம்பரில் மட்டும் ரூ. 23.25 லட்சம் கோடி பரிவர்த்தனைகள் மாற்றப்பட்டுள்ளன. இந்தியாவின் டிஜிட்டல் கொடுப்பனவுகளில் யுபிஐ-யின் பங்கு 2019 ஆம் ஆண்டில் 34 சதவிகிதத்திலிருந்து 2024 ஆம் ஆண்டில் 83 சதவிகிதமாக உயர்ந்துள்ளது, கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒட்டுமொத்த சராசரி வளர்ச்சி விகிதம் 74 சதவிகிதமாக உள்ளது. பரிவர்த்தனைகளின் மொத்த மதிப்பு 2018-ல் 5.86 லட்சம் கோடியிலிருந்து 2024-ல் 246.83 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மே 30 - நெல்லை - திருச்செந்தூர் முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம்!

கருப்பு திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி: முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி!

திருப்பதியில் த்ரிஷா சிறப்பு தரிசனம்!

கோடை விடுமுறைக்கு செல்வோர் கவனத்துக்கு... சிறப்பு ரயில்கள் இயக்கம்! முழு விவரம்!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



