நீதித்துறையின் சுதந்திரத்துக்கு எப்போதும் அச்சுறுத்தல்! ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி

நீதித்துறையின் சுதந்திரம் குறித்து அபய் எஸ். ஓகாவின் உரை...
அபய் எஸ். ஓகா
அபய் எஸ். ஓகா படம்: எக்ஸ்
Published on
Updated on
1 min read

அனைத்து காலகட்டத்தில் யார் ஆட்சியில் இருந்தாலும் நீதித்துறையின் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அபய் எஸ். ஓகா தெரிவித்துள்ளார்.

கோவா உயர்நீதிமன்ற பார் கவுன்சில் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் பங்கேற்று ‘நீதித்துறையின் சுதந்திரம்’ என்ற தலைப்பில் அபய் எஸ். ஓகா வியாழக்கிழமை உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:

“நீதித்துறையின் சுதந்திரம் இன்றும் சவால்கள் நிறைந்ததாக இருக்கிறது. உதாரணமாக, நமது நீதித்துறையில் கொலீஜியம் அமைப்பு முறை செயல்படுகிறது. இதன் ஒவ்வொரு செயல்பாடும் வெளிப்படைத்தன்மையுடன் மாற்றப்பட்டுள்ளது.

கொலீஜியம் பரிந்துரைகள் அனைத்து வலைதளங்களில் வெளிப்படையாக வெளியிடப்படுகிறது. ஆனால், கொலீஜியம் பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளிக்க 9 முதல் 12 மாதங்கள் ஆகின்றன. இது நீதித்துறையின் சுதந்திரத்தை பாதிக்கவில்லையா?

உயர்நீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரை, முதல்வரின் ஆட்சேபனை, ஆளுநரின் ஆட்சேபனை, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் புலனாய்வுத் துறை அறிக்கை என அனைத்தும் உச்சநீதிமன்ற கொலீஜியத்தின் முன் வருகின்றன.

சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளான பிறகும் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பது முக்கியமானதாக இருக்கின்றது. நீதித்துறைக்கு சுதந்திரம் இல்லையென்றாஅல், அடிப்படை உரிமைகளும் ஜனநாயகமும் நிலைத்திருக்காது. ஏழைகள் மற்றும் தாழ்த்தப்பட்டோர்களை பாதுகாப்பது நீதித்துறைதான்.

ஒருவர் நீதிபதியாக அரசியமைப்பின் கீழ் பதவியேற்ற பிறகு, எதிர்கால வாய்ப்புகளைப் பற்றி ஒருபோதும் சிந்திக்கக் கூடாது. வழக்கின் விசாரணையில் அமரும்போது, சட்டத்தையும் அரசியலமைப்பு கொள்கையின் அடிப்படையில்தான் விசாரிக்க வேண்டும். அதிகாரத்தில் இருப்பவர்கள் என்ன நினைப்பார்கள், அவர்கள் புண்படுவார்களா என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படக் கூடாது.

தீர்ப்புகளால் நீதிபதிகளுக்கு ஏற்படக்கூடிய விளைவுகள் பற்றி சிந்திக்கால் இருப்பது கடமை. தைரியமாகவும் அச்சமற்றவராகவும் இருந்தால், உங்களுக்கு உயர் பதவிகள் கிடைக்காமல் போகலாம் அல்லது தாமதமாகக் கிடைக்கலாம். ஆனால், சத்தியத்தை கடைப்பிடிப்பதில் திருப்தி அடைவீர்கள்” எனத் தெரிவித்தார்.

இந்த கருத்தரங்கில் விருந்தினராக கோவா ஆளுநர் பி.எஸ். ஸ்ரீதரன் பிள்ளை மற்றும் மூத்த நீதிபதிகள் பலர் கலந்துகொண்டனர்.

Summary

Retired Supreme Court judge Abhay S. Oka has said that the independence of the judiciary is under threat regardless of who is in power at all times.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com