மணிப்பூரில் இரண்டு தீவிரவாதிகள் கைது: வெடிபொருட்களும் மீட்பு

மணிப்பூரில் தேடுதல் நடவடிக்கையின்போது இரண்டு தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Two militants arrested
பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள். Photo | Manipur police @ X
Published on
Updated on
1 min read

மணிப்பூரில் தேடுதல் நடவடிக்கையின்போது இரண்டு தீவிரவாதிகளை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருப்பதாவது, மாநிலத்தில் மிரட்டி பணம் பறித்தல் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களைக் கைது செய்ய உளவுத்துறை அடிப்படையிலான தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் தடைசெய்யப்பட்ட பிரேபக் அமைப்பைச் சேர்ந்த பெண் சனிக்கிழமை தௌபாலில் உள்ள சலுங்பாம் பகுதியில் கைது செய்யப்பட்டார். அதே நேரத்தில் அந்த அமைப்பைச் சேர்ந்த மற்றொரு உறுப்பினர் இம்பால் மேற்கு மாவட்டத்தில் உள்ள நாகமாபால் பகுதியில் கைது செய்யப்பட்டார்.

சண்டேல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடி மருந்துகளை வெள்ளிக்கிழமை பாதுகாப்புப் படையினர் மீட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் 12 துப்பாக்கிகள், நான்கு ஐஇடிக்கள் மற்றும் நான்கு கையெறி குண்டுகள் அடங்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மணிப்பூரில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இன வன்முறை வெடித்ததில் இருந்து பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜம்மு-காஷ்மீரில் குண்டு பாய்ந்து ராணுவ வீரர் பலி ! போலீஸார் விசாரணை

Summary

Security forces arrested two militants, including a woman, belonging to a proscribed outfit in Manipur's Thoubal and Imphal West districts, police said on Sunday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com