25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

காமராஜரின் சிந்தனைகளும், சமூக நீதி உறுதிப்பாடும் மகத்தான ஊக்கமளிக்கும்! - பிரதமர் மோடி

காமராஜரின் சிந்தனைகளும், சமூக நீதி உறுதிப்பாடும் மகத்தான ஊக்கமளிக்கும் என பிரதமர் மோடி கூறியிருப்பதைப் பற்றி...

பிரதமர் நரேந்திர மோடி.

Published On :15 ஜூலை 2025, 10:14 am IST

காமராஜரின் சிந்தனைகளும், சமூக நீதி உறுதிப்பாடும் மகத்தான ஊக்கமளிக்கும் என பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் கொண்டாடப்படுகிறது. காமராஜரின் பிறந்தநாள், கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்படுவதையொட்டி, அரசியல் தலைவர்கள் காமராஜருக்கு புகழாரம் சூட்டியுள்ளனர்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “காமராஜரின் பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் முன்னணியில் இருந்த அவர், சுதந்திரத்திற்குப் பிந்தைய நமது பயணத்தின் வளர்ச்சிக்குரிய ஆண்டுகளில் விலைமதிப்பற்ற தலைமைத்துவத்தை வழங்கினார்.

அவரது உயரிய சிந்தனைகளும், சமூக நீதி குறித்த உறுதிப்பாடும் நம் அனைவருக்கும் மகத்தான ஊக்கமளிக்கும்” எனப் பதிவிட்டுள்ளார்.

Summary

Prime Minister Narendra Modi has praised Kamaraj's thoughts and commitment to social justice, saying they are a great inspiration.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.