தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

உலகின் வயதான பஞ்சாப் மாரத்தான் வீரர் சாலை விபத்தில் பலி!

உலகின் வயதான மாரத்தான் வீரர் சாலை விபத்தில் பலியானதைப் பற்றி...

News image
ஃபௌஜா சிங்.
Updated On :15 ஜூலை 2025, 5:55 am

இணையதளச் செய்திப் பிரிவு

உலகின் வயதான மாரத்தான் வீரரும், பஞ்சாபை சேர்ந்தவருமான ஃபௌஜா சிங் சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

உலகின் மிகவும் வயதான மாரத்தான் வீரர் என்ற சிறப்பைப் பெற்ற 114 வயதான ஃபௌஜா சிங் பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள பீயாஸ் பிந்த் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை காலை 3.30 மணியளவில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் காயமடைந்தார்.

பலத்த காயமடைந்த ஃபௌஜா சிங்கை, அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும் ஃபௌஜா சிங், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவர் மீது மோதிய வாகனம் எது அவரது, உயிரிழப்புக்கான காரணம் என்ன என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1911 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி பிறந்தவரான ஃபௌஜா சிங், 1993 ஆம் ஆண்டு தனது 89 வது வயதில் இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்தார். ‘டர்பனேட் டோர்னாடோ’ எனப் புகழப்படும் ஃபௌஜா சிங், மாரத்தான் போட்டிகளில் பங்கேற்றார். மேலும், தனது 100-வது வயதில் டொராண்டோ வாட்டர்ஃபிரண்ட் மராத்தானில் பங்கேற்று உலகப் புகழ்பெற்றார்.

2000 முதல் 2013 ஆம் ஆண்டு வரையிலான 14 ஆண்டுகளில் 9 மாரத்தான் போட்டிகளில் பங்கேற்றார். லண்டன் மராத்தானில் போட்டியிட்டு, பந்தய தூரத்தை 6 மணி நேரம் 54 நிமிடங்களில் முடித்து சாதனையும் படைத்திருந்தார்.

இன சகிப்புத்தன்மையின் அடையாளமாக இருந்ததற்காக, 2003 ஆம் ஆண்டு தேசிய இனக் கூட்டணியால் ஃபௌஜா சிங்குக்கு ‘எல்லிஸ் தீவு பதக்கம்’ வழங்கப்பட்டது.

அப்போது அவர் இந்த கௌரவத்தைப் பெற்ற முதல் அமெரிக்கரல்லாதவர் என்ற பெருமையையும் பெற்றிருந்தார். மேலும், 2011 ஆம் ஆண்டில் ஃபௌஜா சிங்கிற்கு ‘இந்தியாவின் பெருமை' என்ற பட்டமும் வழங்கப்பட்டது.

ஃபௌஜா சிங்கின் மறைவுக்கு பஞ்சாபைச் சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

summary

Turbaned Tornado No More: World’s Oldest Marathon Runner Fauja Singh Dies In Road Accident At 114

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.