வரதட்சிணை கொலை! மகளையும் கொன்று கேரளத்துப் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

வரதட்சிணை கொடுமை காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் கேரளத்துப் பெண் தற்கொலை செய்த சம்பவத்தால் பரபரப்பு
பிரதிப் படம்
பிரதிப் படம்ENS
Published on
Updated on
1 min read

வரதட்சிணை கொடுமை காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் கேரளத்துப் பெண் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளம் மாநிலத்தின் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த விபன்சிகா மணியன் (32) என்பவர், 2020-ல் திருமணமாகி கணவர் நிதிஷுடன் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு குடிபெயர்ந்தார்.

இந்த நிலையில், ஜூலை 8 ஆம் தேதியில் ஷார்ஜாவில் வசித்து வந்த விபன்சிகாவும் அவரது மகளும் தற்கொலை செய்துகொண்டதாக அவரின் பணிப்பெண் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, நடத்தப்பட்ட விசாரணையில் வரதட்சிணையின் காரணமாகவே விபன்சிகா தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்தது.

விபன்சிகா தற்கொலை செய்துகொண்ட அடுத்த நாளிலேயே அவரது முகநூல் பக்கத்தில் தற்கொலைக் குறிப்பு வெளிவருமாறு பதிவிட்டுச் சென்றுள்ளார்.

அதில், வரதட்சிணை கொடுமை காரணமாக தற்கொலை செய்துகொள்வதாகக் குறிப்பிட்டிருந்தார். மேலும், அவரின் வீட்டில் இருந்து 6 பக்கங்கள்கொண்ட, மலையாளத்தில் எழுதப்பட்ட தற்கொலைக் குறிப்புக் கடிதமும் கண்டெடுக்கப்பட்டது.

விபன்சிகாவின் மகள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாகக் கூறப்படும் நிலையில், தான் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக மகளின் முகத்தில் தலையணையை அழுத்தி கொன்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, விபன்சிகாவின் பெற்றோரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல கொடூரமான கொடுமை தகவல்களும் கிடைத்தன.

விபன்சிகாவிடம் வரதட்சிணை கேட்டு, அவரது கணவர் நிதிஷ், நிதிஷின் தந்தை மோகனன், சகோதரி நீது விபன்சிகாவை மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் கொடுமைப்படுத்தியதாக விபன்சிகா பெற்றோர் தெரிவித்தனர். கொடுமையின் காரணமாக தனது மகளுடன் விபன்சிகா தனியாக வசித்து வந்துள்ளார்.

விபன்சிகா, வெளுப்பான நிறத்துடன் இருந்த நிலையில், நிதிஷும் அவரது குடும்பத்தினரும் நிறம் குறைவாகவே இருந்துள்ளனர். இதனால், விபன்சிகா அழகாக இருக்கக் கூடாது என எண்ணி, விபன்சிகாவின் தலையை மொட்டையடிக்கவும் முற்படுத்தியுள்ளனர். இதனிடையே, பல பெண்களுடன் நிதிஷுக்கு தொடர்பு இருந்ததாகக் கூறி, அவருக்கு எதிர்ப்பு தெரிவித்த விபன்சிகாவை உடல்ரீதியாகவும் கொடுமைப்படுத்தியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, தனியாக வசித்து வந்த விபன்சிகாவிடம் விவாகரத்துகோரி நிதிஷ் நோட்டீஸ் அனுப்பினார். இந்த நிலையில்தான், விபன்சிகா தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த கேரள காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

Summary

Head shaved, tortured for dowry: Kerala woman in UAE kills baby, dies by suicide

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com