
இறந்தோரின் ஆதார் அட்டைகளும் செயலாக்கத்தில் இருப்பதால், ஆதார் அட்டை வைத்திருப்போரின் இறுதி எண்ணிக்கை அறிவதில் சிக்கல் இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஐ.நா. அவையின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, ஏப்ரல் 2025 வரையில் இந்தியாவில் 146.39 கோடி பேர் உள்ளனர். அவர்களில் ஜூன் 2025 வரையில் 142.39 கோடி பேர் ஆதார் அட்டை பெற்றுள்ளனர்.
இறந்தவர்களின் பெயர்களை ஆதார் பட்டியலில் இருந்து நீக்குவது இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI) பொறுப்பு.
இதன்படி, 2007 - 19 வரையிலான காலகட்டத்தில் ஆண்டுதோறும் இறப்பு எண்ணிக்கையானது 83.5 லட்சம் பேர் என்றுள்ளது. ஆனால், இந்த காலகட்டத்தில் இறந்தோர்களில் வெறும் 10 சதவிகிதத்தினரின் பெயர்கள் மட்டுமே ஆதார் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. அதாவது, வெறும் 1.15 கோடி பேரின் பெயர்கள் மட்டுமே ஆதார் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
மாநில அரசுகள் வழங்கும் இறப்புச் சான்றிதழ்கள் மற்றும் இறந்தோரின் குடும்பத்தினரிடமிருந்து பெறப்படும் புதுப்பிப்புகள் போன்ற தரவுகளைப் பொறுத்தே ஆதார் செயலிழப்புச் செயல்முறை உள்ளதால், இறந்தோரின் ஆதார் செயலிழப்பு சிக்கலானது என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இறந்தோரின் ஆதாரும் செயலாக்கத்தில் இருப்பதாகக் கூறுகின்றனர்.
ஆகையால், இறப்போரின் முறையான விவரங்கள் பதிவுசெய்யப்பட்டு, அவர்களின் ஆதார் எண்கள் நீக்கப்பட்டால்தான், ஆதார் அட்டை வைத்திருப்போரின் இறுதி எண்ணிக்கை தெரிய வரும்.
இதையும் படிக்க: காமராஜருக்கு ஏசி முக்கியம்! திருச்சி சிவா பேச்சுக்கு செல்வப்பெருந்தகை பதில்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.