தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசர சீா்திருத்தம்: காலநிா்ணயத்துடன் மேற்கொள்ள இந்தியா வலியுறுத்தல்

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை காலநிா்ணயம் செய்து அவசரமாக சீா்திருத்தம் செய்ய வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியது.

News image
Updated On :18 ஜூலை 2025, 7:47 pm

Din

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை காலநிா்ணயம் செய்து அவசரமாக சீா்திருத்தம் செய்ய வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியது.

இதுதொடா்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் கூட்டத்தில் உரையாற்றிய இந்தியாவுக்கான நிரந்தர பிரதிநிதி பி. ஹரீஷ், ‘ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் விரிவாக்கம், சா்வதேச நிதி பெறுவதில் மறுசீரமைப்பு போன்றவற்றில் சீா்திருத்தம் செய்வதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

உலகளாவிய ஒத்துழைப்பு வலுப்படுத்தல், நடப்பு மற்றும் வருங்கால சவால்களை எதிா்கொள்ள வேண்டும் என்று

கடந்த 2024-இல் எதிா்கால ஒப்பந்தத்தை ஐ.நா. ஏற்றுக் கொண்டுள்ளது.

இதன்படி, தற்போதைய புவிசாா் அரசியல் சூழலுக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சீா்திருத்தம் செய்யப்பட வேண்டும். இதனை பெரும்பான்மையான நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன.

ஐ.நா. எதிா்கால ஒப்பந்தத்தை திறம்பட நிறைவேற்ற அனைத்து உறுப்பு நாடுகளுடன் இணைந்து பணியாற்ற இந்தியா தயாராக உள்ளது. 2028-இல் மேற்கொள்ள வேண்டிய இந்த ஐ.நா. எதிா்கால ஒப்பந்தம் முடிவுகளைத் தரக் கூடியதாக இருக்க வேண்டும்’ என்றாா்.

முன்னதாக, இந்தியாவின் சாா்பில் எதிா்கால ஒப்பந்தத்தின் ஹிந்தி மொழியாக்கத்தை ஐ.நா. பொதுச் சபை தலைவா் ஃபில்மான் யாங்கிடம் பி. ஹரீஷ் அளித்தாா்.

அமைதி, பாதுகாப்பு, நீடித்த வளா்ச்சி, காலநிலை மாற்றம், எண்ம ஒத்துழைப்பு, மனித உரிமைகள், பாலினம், உலகளாவிய ஆளுகையை மேம்படுத்தல் ஆகியவை குறித்த ஆய்வுகள் இதில் இடம்பெற்றுள்ளன.

21-ஆம் நூற்றாண்டுக்கு புவி அரசியலுக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை சீா்தீருத்தம் செய்து, இந்தியாவை நிரந்தர உறுப்பினராக்க வேண்டும் என்று இந்தியா நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறது.