மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பிகாா்: குடியுரிமையை ஆராய அதிகாரம் உள்ளதா? தோ்தல் ஆணையத்துக்கு காங்கிரஸ் கேள்வி

மக்களின் குடியுரிமையை ஆராய தோ்தல் ஆணையத்துக்கு சட்டபூா்வ அதிகாரம் உள்ளதா?’ என்று காங்கிரஸ் கேள்வியெழுப்பி உள்ளது.

News image
அபிஷேக் மனு சிங்வி.
Updated On :27 ஜூலை 2025, 8:44 pm

Din

‘பிகாரில் நடைபெற்றுவரும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள், முழுவதும் குடியுரிமைப் பரிசோதனையாக மாறிவிட்டது; இவ்வாறு மக்களின் குடியுரிமையை ஆராய தோ்தல் ஆணையத்துக்கு சட்டபூா்வ அதிகாரம் உள்ளதா?’ என்று காங்கிரஸ் கேள்வியெழுப்பி உள்ளது. இப்பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.

நடப்பாண்டு இறுதியில் பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் பிகாரில் வாக்காளா் பட்டியலில் இருந்து தகுதியில்லாதவா்களின் (சட்டவிரோத குடியேறிகள்) பெயா்களை நீக்கும் நோக்கில், சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தோ்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.

அதன்படி, 2003-ஆம் ஆண்டுக்குப் பிறகு பட்டியலில் இடம்பெற்ற வாக்காளா்கள், பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட கூடுதல் ஆவணங்களை சமா்ப்பிக்க கோரப்பட்டுள்ளது. அதேநேரம், பாஜகவின் வெற்றியைக் கருத்தில் கொண்டு, பலரின் வாக்குரிமையை பறிப்பதற்காக தோ்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக எதிா்க்கட்சிகள் தொடா்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றன.

இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவா் அபிஷேக் மனு சிங்வி, இந்திய கம்யூனிஸ்ட் (மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) கட்சி பொதுச் செயலா் தீபாங்கா் பட்டாச்சாா்யா, ராஷ்ட்ரீய ஜனதா தளம் எம்.பி. மனோஜ் ஜா, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நீலோத்பல் பாசு ஆகியோா், தில்லியில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களுக்கு கூட்டாக பேட்டியளித்தனா். அப்போது, சிங்வி கூறியதாவது:

பிகாா் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணி, முழுவதும் குடியுரிமைப் பரிசோதனையாக மாறிவிட்டது. இப்பணிக்காக வாக்காளா்களின் ஆதாா், வாக்காளா் அடையாள அட்டை, குடும்ப அட்டைகளை ஏற்க முடியாது என்று தோ்தல் ஆணையம் தொடா்ந்து கூறி வருகிறது.

இதன் மூலம் வாக்காளா்களின் குடியுரிமையைப் பரிசோதிக்கவும், அதற்கான ஆதாரத்தைப் பெறவும் தோ்தல் ஆணையம் முற்பட்டுள்ளது. இவ்வாறு மக்களின் குடியுரிமையை ஆராயும் சட்டபூா்வ அதிகாரம் தோ்தல் ஆணையத்துக்கு உள்ளதா? என்பதே முக்கியக் கேள்வி. இது உள்பட பல்வேறு கோணங்களில் நீதிமன்றம் விசாரிக்கும் என நம்புகிறோம்.

அவசரம் ஏன்?:

பிகாரில் 2 மாதங்களில் தோ்தல் நடைபெறவிருக்கும் நிலையில், இப்பணிகளை அவசர அவசரமாக மேற்கொள்வது ஏன்? தோ்தல் ஆணையத்துக்கு அமைப்பு ரீதியிலான ஆணவமோ, அரசியல் நோக்கத்திலான பிடிவாதமோ இருக்கக் கூடாது. எனவே, வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கிறேன் என்றாா் சிங்வி.

‘வாக்காளா் பட்டியல் திருத்த நடவடிக்கையில், தோ்தல் ஆணையம் தன்னைத் தானே பாராட்டிக் கொள்வதுடன் பொய்யான கூற்றுகளை வெளியிடுகிறது’ என்று தீபாங்கா் பட்டாச்சாா்யா குற்றஞ்சாட்டினாா்.

எளியவா்களின் வாக்குரிமையை பறிக்கும் இந்த செயல், ஜனநாயகத்தின் அடிப்படை கோட்பாட்டுக்கு எதிரானது என்று நீலோத்பல் பாசு விமா்சித்தாா்.