ஆபரேஷன் சிந்தூர்: மக்களவையில் அமித் ஷாவின் மகத்தான உரை - மோடி புகழாரம்
ஆபரேஷன் சிந்தூர் குறித்து மக்களவையில் அமித் ஷா ஆற்றிய உரை மகத்தானது என மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.


புது தில்லி: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து மக்களவையில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, விளக்கமளித்து ஆற்றிய உரை மகத்தானது என்று பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியிருக்கிறார்.
நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதில், மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளை எடுத்துரைப்பதாக இந்த உரை அமைந்திருந்ததாகவும் மோடி குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், மக்களவையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆற்றிய மகத்தான உரையில், கோழைத்தனமான பயங்கரவாதத் தாக்குதல்களை முறியடிப்பதில் மிக முக்கியப் பங்காற்றிய ஆபரேஷன் சிந்தூர் மற்றும் ஆபரேஷன் மகாதேவ் பற்றி பல முக்கியமான தகவல்களை வெளியிட்டார்.
நம் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதில், மத்திய அரசின் தீவிரத்தன்மை குறித்து வெளிப்படுத்துவதாக அவரது உரை அமைந்திருந்தது.
மக்களவையில் இன்று உரையாற்றிய அமித் ஷா, ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில், இந்திய ராணுவம், சிஆர்பிஎஃப் மற்றும் ஜம்மு -காஷ்மீர் காவல்துறை இணைந்து நடத்திய கூட்டு அதிரடி நடவடிக்கையின்போது, பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட மூன்று பயங்கரவாதிகள் அடையாளம் காணப்பட்டுக் கொல்லப்பட்டதாக அறிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற ஆபரேஷன் சிந்தூர் பற்றிய சிறப்பு விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய அமித் ஷா, ஆபரேஷன் மகாதேவ் என்ற பெயரில் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், அவர்களது பெயர்களையும் வெளியிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...