தில்லியில் சிஎன்ஜி சிலிண்டர் வெடித்ததில் 2 குழந்தைகள் பலி

தில்லியில் சிஎன்ஜி சிலிண்டர் வெடித்ததில் சிகிச்சைப் பலனின்றி 2 குழந்தைகள் பலியானார்கள்.
Two children succumb during treatment after CNG cylinder blast: Delhi Police
கோப்புப்படம்.
Updated on
1 min read

தில்லியில் சிஎன்ஜி சிலிண்டர் வெடித்ததில் சிகிச்சைப் பலனின்றி 2 குழந்தைகள் பலியானார்கள்.

வடகிழக்கு தில்லியின் சுந்தர் நக்ரியில் பழைய சிஎன்ஜி சிலிண்டர்களை பழுதுபார்க்கும் கிடங்கு உள்ளது. இங்கு சனிக்கிழமை மாலை சிஎன்ஜி சிலிண்டர் ஒன்றை பழுதுபார்க்கும்போது சிலிண்டர் திடீரென வெடித்ததாகக் கூறப்படுகிறது.

அந்த நேரத்தில் வளாகத்திற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த 4, 7 மற்றும் 9 வயதுடைய மூன்று குழந்தைகள் காயமடைந்தனர்.

அஞ்சலை அம்மாள் சிலைக்கு விஜய் மரியாதை

உடனே அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும் அதில் 2 குழந்தைகள் சிகிச்சைப் பலனின்றி பலியானதாக ஞாயிற்றுக்கிழமை போலீஸார் தெரிவித்தனர்.

இந்த வெடிவிபத்தில் கிடங்கிற்குள் இருந்த 25 வயது தொழிலாளி அர்ஷத் காயமடைந்தார்.

அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் கிடைத்ததும் அங்கு விரைந்த போலீஸ் குழு விபத்து நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com