காமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

நாட்டில் 4,000 தொட்ட கரோனா பாதிப்பு! ஒரே வாரத்தில் 3 மடங்கு அதிகமானது!

இந்தியாவில் கரோனா பாதிப்பு நிலவரம் பற்றி..

News image

இந்தியாவில் கரோனா பாதிப்பு - கோப்புப்படம்

Updated On :2 ஜூன் 2025, 1:17 pm IST

நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,000-யை எட்டியுள்ளது.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மீண்டும் கரோனா தொற்று பரவத் தொடங்கியிருக்கிறது. கேரளம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் கரோனா வேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில் இன்றைய நிலவரப்படி(ஜூன் 2) நாட்டில் தற்போது 3,961 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக கேரளத்தில் 1,435 பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது. மகாராஷ்டிரத்தில் 506, தில்லியில் 483, குஜராத்தில் 338, மேற்கு வங்கத்தில் 331, கர்நாடகத்தில் 253, தமிழ்நாட்டில் 189, உத்தரப் பிரதேசத்தில் 157, ராஜஸ்தானில் 69 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Story image

கடந்த மே 22 ஆம் தேதி 257 பேர் மட்டுமே பாதிக்கப்பட்ட நிலையில் மே 26-ல் 1,010 ஆக உயர்ந்தது. அடுத்த ஒரு வாரத்தில் தற்போது(ஜூன் 2) 3 மடங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 203 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. தில்லி, கேரளம், மகாராஷ்டிரம், தமிழகத்தில் தலா ஒருவர் என 4 பேர் கரோனாவுக்கு இறந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.