Three dead, six security personnel missing as landslide hits military camp in Sikkim
நிலச்சரிவு.

சிக்கிமில் ராணுவ முகாமில் நிலச்சரிவு: 3 பேர் பலி

சிக்கிமில் ராணுவ முகாமில் நிலச்சரிவு ஏற்பட்ட நிலச்சரிவில் 3 பேர் பலியானார்கள்.
Published on

சிக்கிமில் ராணுவ முகாமில் நிலச்சரிவு ஏற்பட்ட நிலச்சரிவில் 3 பேர் பலியானார்கள்.

சிக்கிமில் பெய்த கனமழை காரணமாக சாட்டனில் உள்ள ராணுவ முகாமில் ஞாயிற்றுக்கிழமை இரவு நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 3 பேர் பலியானார்கள்.

மேலும் 6 பாதுகாப்புப் படையினர் காணாமல் போயுள்ளனர் என்று திங்கள்கிழமை பாதுகாப்பு அதிகாரி கூறினார்.

மூன்று உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அதேசமயம் 4 பேர் சிறிய காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர் என்று அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டது.

ஜம்மு ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

காணாமல் போன ஆறு வீரர்களைக் கண்டுபிடிக்க மீட்புக் குழுக்கள் சவாலான சூழ்நிலையில் 24 மணி நேரமும் பணியாற்றி வருகின்றன என்று அதிகாரி மேலும் தெரிவித்தார்.

சிக்கிமில் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com