ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு! ஏப். 21 மாலை 6 மணி முதல் எந்த வகையிலும் பிரசாரம் கூடாது! - தேர்தல் ஆணையம்234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?பேரவைத் தேர்தல்! மோசமான குற்ற வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்களில் எந்தக் கட்சி முதலிடம்?பட்டப்படிப்பு மட்டும் போதாது.. செய்யறிவு உங்கள் வேலையை பறிக்காமல் இருக்க என்ன செய்யலாம்? ஆர்எஸ்எஸ் - பாஜகவை எதிர்க்கும் துணிச்சல்மிக்கவர்கள் தமிழர்கள்! குளச்சலில் ராகுல் பேச்சுஅக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

பிரிக்ஸ் மாநாட்டில் இந்தியா பங்கேற்குமா?

பிரிக்ஸ் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளுமா என்ற சந்தேகம் அரசியல் வட்டாரங்களில் நிலவி வருவதாக தகவல்

News image

கோப்புப் படம்

Updated On :5 ஜூன் 2025, 4:34 pm

பிரிக்ஸ் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளுமா என்ற சந்தேகம் அரசியல் வட்டாரங்களில் நிலவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரேஸில் நாட்டில் அடுத்த மாதம் (ஜூலை 6) பிரிக்ஸ் மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக ஆர்ஐசி (RIC) மாநாடு நடைபெறவும் வாய்ப்பிருக்கிறது. ரஷியாவின் முன்னாள் பிரதமர் யெவ்ஜெனி ப்ரிமாகோவின் முயற்சியால் ரஷியா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் அடங்கிய உச்சி மாநாடு நடத்தப்பட்டது.

இதுவரையில் 3 முறை நடத்தப்பட்ட ஆர்ஐசி மாநாடு, 2020 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் கரோனா தொற்றுக்காலத்தில் இருந்து நடத்தப்படவில்லை. இதனிடையே, இந்தியா - சீன ராணுவ வீரர்களிடையே மோதலும் ஏற்பட்டு விட்டது.

இதனைத் தொடர்ந்து, விடியோ அழைப்பு வாயிலாக மாநாடு நடத்தப்பட்டிருந்தாலும், அதில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்தான் கலந்து கொண்டார்.

இந்த நிலையில், ஜூலை மாதம் நடைபெறவுள்ள பிரிக்ஸ் மாநாட்டின் ஒரு பகுதியான ஆர்ஐசி மாநாட்டில் இந்தியா பங்கேற்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஏனெனில், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, பாகிஸ்தானுக்கு சீனா ஆதரவளித்திருந்தது. இதனால், மாநாட்டில் சீனாவை இந்தியா சந்திக்குமா என்று சந்தேகிக்கப்படுகிறது.

இருப்பினும், ஆட்டோமொபைல் துறைக்கு மூலதனமான ஒருவகை காந்தங்களை இந்தியாவுக்கு சீனாதான் ஏற்றுமதி செய்து வரும் நிலையில், ஏற்றுமதியை நிறுத்தி வைத்துள்ளது. இதனால், உற்பத்தி நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஆர்ஐசி மாநாட்டில் கலந்துகொண்டு, சீனாவை இந்தியா வலியுறுத்துவதற்காக, பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளலாம் என்றும் கூறுகின்றனர். எதுவாயினும், மாநாட்டின்போதுதான் தெரிய வரும்.

இருப்பினும், மாநாட்டில் கலந்துகொண்டு, வர்த்தக உறவைத் தடையின்றி, தொடர வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பமாகவே இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.