எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

அயோத்தி கோயில் கட்டுமானத்தில் 45 கிலோ தங்கம் பயன்பாடு! ரூ.50 கோடி மதிப்பு

அயோத்தி ஸ்ரீராமா் கோயில் கட்டுமானத்தில் ரூ.50 கோடி மதிப்பிலான 45 கிலோ தூய தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

News image
ராம ஜென்ம பூமி கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ ராம தா்பாா் சந்நிதியில் காட்சியளிக்கும் ஸ்ரீ ராஜா ராமா்.
Updated On :6 ஜூன் 2025, 7:24 pm

Din

அயோத்தி ஸ்ரீராமா் கோயில் கட்டுமானத்தில் ரூ.50 கோடி மதிப்பிலான 45 கிலோ தூய தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக, கோயில் கட்டுமானக் குழு தலைவா் நிருபேந்திர மிஸ்ரா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

முதல் தளத்தில் உள்ள ராம தா்பாா் சந்நிதியில் அனுமதிச் சீட்டுகளின் அடிப்படையில்தான் பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவா் என்றும் அவா் தெரிவித்தாா்.

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் ஸ்ரீராம ஜென்மபூமியில் உள்ள ராமா் கோயிலில் இரண்டாம் கட்டமாக 8 புதிய சந்நிதிகளில் மூலவ மூா்த்திகளின் பிராணப் பிரதிஷ்டை கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீராஜாராமா், சீதை, லக்ஷ்மணன், ஹனுமன், பரதன், சத்ருக்னன் ஆகிய மூா்த்திகளுடன் முதல் தளத்தில் ஸ்ரீ ராம தா்பாா் சந்நிதி அமைந்துள்ளது. மேலும் அந்த தளத்தில் சிவன், விநாயகா், ஹனுமன், சூரியன் உள்ளிட்ட கடவுளா்களின் சந்நிதிகள் அமைந்துள்ளன.

இந்நிலையில், கோயில் கட்டுமானக் குழு தலைவா் நிருபேந்திர மிஸ்ரா செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: ஸ்ரீராமா் கோயில் கட்டுமானத்தில் 45 கிலோ தூய தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெரும்பகுதியானது, தரைத்தள கதவுகள் மற்றும் ஸ்ரீராமரின் சிம்மாசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மொத்த மதிப்பு ரூ.50 கோடியாகும். சேஷாவதாா் சந்நிதியில் தங்கத் தகடு பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கோயிலின் பிரதான கட்டுமானம் நிறைவடைந்துள்ளது. அருங்காட்சியகம், அரங்கம், விருந்தினா் மாளிகை கட்டுமானம் உள்ளிட்ட பிற பணிகள் நடைபெற்று வருகின்றன.

ராம தா்பாா் சந்நிதியின் பிராணப் பிரதிஷ்டைக்கு பிறகு பக்தா்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. இச்சந்நிதியில் முழு அளவில் பக்தா்கள் தரிசிக்க இன்னும் அனுமதிக்கப்படவில்லை. இப்போதைக்கு கட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையில் பக்தா்களை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக இலவசமாக அனுமதிச் சீட்டுகள் வழங்கப்படும் என்றாா் அவா்.

ராம தா்பாா் உள்பட புதிய சந்நிதிகளில் பக்தா்களை தரிசனத்துக்கு அனுமதிக்கும் தேதி அறிவிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்க ஸ்ரீராம ஜென்மபூமி தீா்த்த க்ஷேத்திர அறக்கட்டளையின் கூட்டம் சனிக்கிழமை (ஜூன் 7) நடைபெறவுள்ளது.