

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 391 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், மொத்த எண்ணிக்கை 5755 ஆக உள்ளது.
மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், கேரளம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் கர்ப்பிணி ஒருவர் உள்பட 4 பேர் நேற்று கரோனாவுக்கு பலியாகியுள்ளனர். பலியான பெண், 45 வயதுடைய 9 மாத கர்ப்பிணி என்பதும், மற்ற மூவரும், வயது முதுமை மற்றும் இணை நோய்கள் காரணமாக மரணமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் கரோனா பாதித்து சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 194 ஆக உள்ளது. இவர்களில் 27 பேர் குணமடைந்துள்ளனர்.
இதையும் படிக்க.. தங்கம் வாங்குவோருக்கு மகிழ்ச்சியான செய்தி! விலை அதிரடி குறைவு!!
இதனால் நாட்டில் தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 6,000-ஐ நெருங்குகிறது.
கரோனாவால் கடந்த 24 மணிநேரத்தில் 4 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, கடந்த ஜனவரியில் இருந்து இதுவரை கரோனா பாதிப்பால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 59-ஆக அதிகரித்துள்ளது.
உலகம் முழுவதும் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு மாத காலத்தில் நாட்டில் கரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது. மத்திய சுகாதார அமைச்சக தரவுகளின்படி, கடந்த மே 22-ஆம் தேதி 257-ஆக இருந்த கரோனா பாதிப்பு, தற்போது 6,000ஐ நெருங்கி வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் 391 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது பரவிவரும் கரோனா வகைகள் தீவிரமில்லாதவை என்பதால், பெரும்பாலான நோயாளிகள் வீட்டு சிகிச்சையிலேயே குணமடைந்து வருகின்றனர் என்றும், மக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முதியோா், கா்ப்பிணிகள், தீவிர நோயாளிகள் உள்ளிட்டோா் பொது இடங்களில் முகக் கவசம் அணிய வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.