
தில்லியில் காங்கிரஸ் தலைவர் கார்கே, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் சந்தித்து கர்நாடக கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து விளக்கமளித்து வருகின்றனர்.
நடந்து முடிந்த 2025 ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையைக் கைப்பற்றியது. சாம்பியன் பட்டத்தை வென்ற களிப்பில் வீரர்கள் ஐபில் கோப்பையுடன் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் கடந்த ஜூன் 4 ஆம் நடத்திய பேரணியில் பங்கேற்கச் சென்ற பார்வையாளர்கள் 11 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். 33 போ் காயமடைந்தனர்.
இதுதொடர்பாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது பெங்களூரு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பான வழக்கும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
இந்த சம்பவத்திற்கு மாநில அரசின் அலட்சியம்தான் காரணம் என்று மாநில எதிர்க்கட்சியான பாஜக உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்நிலையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் ஆகியோர் தில்லி சென்றுள்ளனர்.
தில்லியில் இன்று(செவ்வாய்க்கிழமை) காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரைச் சந்தித்து கர்நாடக கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து விளக்கமளித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.