ஆமதாபாத்: சிதைந்த நிலையில் பயணிகள்; உறவினர்களிடம் `டிஎன்ஏ மாதிரி’ கோரும் குஜராத் அரசு!

விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உடல்களை அடையாளம்காண, அவர்களின் உறவினர்களின் டிஎன்ஏ மாதிரி கோரப்பட்டுள்ளது.
விமான விபத்து பகுதியில் நடைபெறும் மீட்புப் பணிகள்
விமான விபத்து பகுதியில் நடைபெறும் மீட்புப் பணிகள்PTI
Published on
Updated on
1 min read

குஜராத் விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உடல்களை அடையாளம்காண, அவர்களின் உறவினர்களின் டிஎன்ஏ மாதிரி கோரப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலம் ஆமதாபாதில் ஏற்பட்ட விமான விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விமானம் எரிந்ததில், உள்ளிருந்தவர்கள் உடல்கள் அடையாளம் தெரியாத வகையில் சிதைந்த நிலையில் இருப்பதால், அவர்களை அடையாளம் காணுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறையின் கூடுதல் தலைமை செயலாளர் தனன்ஜெய் திவிவேதி கூறுகையில், விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த பயணிகளின் உடல்களை அடையாளம் காணுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளமையால், அவர்களின் உறவினர்கள் டிஎன்ஏ மாதிரியை அளிக்குமாறு வேண்டுகிறோம். விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக 6357373831 மற்றும் 6357373841 என்கிற உதவிமைய எண்களும் வெளியிடப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

மேலும், விமானம் மோதிய மருத்துவக் கல்லூரி விடுதியில் இருந்த மாணவர்களும் விபத்தில் சிக்கிய நிலையில், அவர்களும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விமான விபத்தால், அப்பகுதியில் இருந்த சிலரும் பாதிக்கப்பட்டிருந்தாலும், அவர்களின் சிகிச்சையில் முன்னேற்றம் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 1 கோடி இழப்பீடும், காயமடைந்தவர்களின் முழு மருத்துவச் செலவையும் ஏற்பதாக டாடா குழுமம் அறிவித்துள்ளது.

இதையும் படிக்க: ஏர் இந்தியா விமான விபத்தில் உயிர்பிழைத்த ஒருவர்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com