மனதை உடைக்கும் பேரழிவு: குடியரசுத் தலைவர் வருத்தம்!

ஆமதாபாத்தில் நடந்த பேரழிவுக்கு குடியரசுத் தலைவர் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளார்.
மனதை உடைக்கும் பேரழிவு: குடியரசுத் தலைவர் வருத்தம்!
Published on
Updated on
1 min read

குஜராத்தின் ஆமதாபாத்தில் நடந்தது மனதை உடைக்கும் பேரழிவு என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்ட பதிவில்.

ஆமதாபாத்தில் நடந்தது மனதை உடைக்கும் பேரழிவு என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த தேசம் துணை நிற்கிறது என்று அவர் கூறியுள்ளார்.

நடந்தது என்ன?

குஜராத்தின் ஆமதாபாத்தின் சர்தார் வல்லபாய் பட்டேல் விமான நிலையத்தில் இருந்து போயிங் 787-8 ரக ஏர் இந்தியா விமானம் பிற்பகல் 1.38 லண்டனுக்குப் புறப்பட்டுச் சென்ற சில மணி துளிகளிலேயே 1.43-க்கு விமானம் விழுந்து நொறுங்கியது. இந்த விமானத்தில் 242 பேர் பயணித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

முதல்கட்டமாக 133 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. விமானத்தில் பயணித்தவர்களில் 169 இந்தியர்கள், 53 பிரிட்டன் நாட்டவர்கள், ஒருவர் கனடா நாட்டவர் மற்றும் 7 போர்த்துகீசிய நாட்டவரைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com