
தேனிலவு அழைத்துச் சென்று கணவரைக் கொலை செய்த வழக்கில் கைதான சோனம், மற்றொரு பெண்ணையும் கொன்று, அந்த உடலை சோனம் என்று நாடகமாட திட்டமிட்டிருந்த தகவல் வெளியாகியிருக்கிறது.
திருமணத்துக்கு முன்பு ஏற்பட்ட காதல் காரணமாக, கணவரைக் கொலை செய்ய திட்டமிட்ட சோனம், மேகாலயத்துக்கு கணவரை தேனிலவு அழைத்துச் சென்று கொலை செய்வது என முடிவெடுத்தபோது, அங்கு மற்றொருப் பெண்ணையும் கொன்று, அது சோனம் உடல் என நாடகமாகவும் திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதாவது, ராஜா ரகுவன்ஷி கொலை செய்யப்பட்ட நிலையில், வேறொரு பெண்ணையும் கொன்று, அந்த உடலை எரித்துவிட்டு, அது சோனம் என்று கூலிப் படையினர் திட்டமிட்டிருந்ததாகவும், அதற்கான முயற்சிக்காகத்தான், சில நாள்கள் சோனம் தலைமறைவாக இருந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இதையும் படிக்க.. விமானத்தில் அதிர்ஷ்டமான இருக்கையாக 11ஏ மீண்டும் நிரூபணம்! ஏன்? எப்படி?
இந்த ஒட்டுமொத்தக் கொலைக்கும் பின்னணியில் மூளையாக இருந்தது ராஜ் குஷ்வாஹா என்றும், இந்த கொலைத் திட்டம் இந்தூரில் திட்டமிடப்பட்டு, செயல்படுத்தப்பட்டுள்ளது. ராஜா ரகுவன்ஷி - சோனம் திருமணத்துக்கு முன்பே கொலைத் திட்டம் உருவாக்கப்பட்டுவிட்டதாகவும், ஏற்கனவே போட்ட மூன்று திட்டங்கள் கொலையில் முடியாமல், நான்காவது திட்டம்தான் நிறைவேறியதாகவும் கூறப்படுகிறது.
குறிப்பாக, திருமணம் மே மாதம் நடைபெற்ற நிலையில், கொலைத் திட்டம் பிப்ரவரி மாதமே தீட்டப்பட்டிருந்ததும், ஒன்று, ஆற்றில் சோனம் அடித்துச் செல்லப்பட்டதாக நாடகமாடுவது அல்லது, ஒரு பெண்ணைக் கொன்று எரித்துவிட்டு சோனம் என நாடகமாடுவது என்ற திட்டங்களும் கொலைச் சதியில் இருந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.