
அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் பலியானோருக்கு இடைக்கால நிவாரணமாக ஏர் இந்தியா கூடுதலாக ரூ. 25 லட்சம் அறிவித்துள்ளது.
ஜூன் 12ஆம் தேதி அகமதாபாதிலிருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், விமான நிலையத்துக்கு அருகே விழுந்து விபத்துக்குள்ளானது.
இதில் இருந்த 242 பேரில் 241 பேர் பலியாகினர். பலியானவர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என ஏர் இந்தியாவின் டாடா குழுமம் அறிவித்த நிலையில், தற்போது கூடுதலாக ரூ. 25 லட்சம் இடைக்கால நிவாரணம் அளிப்பதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
விபத்தில் பலியானோர்களின் குடும்பத்தினர் மற்றும் உயிர் பிழைத்தவர்களின் குடும்பத்தினரின் உடனடி தேவைகளுக்காக கூடுதலாக இத்தொகை வழங்கப்படுவதாக ஏர் இந்தியா தெரிவித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.