கொல்கத்தா: கொல்கத்தாவிலிருந்து புறப்படவிருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் அந்த விமானம் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றது. கொல்கத்தா விமான நிலையத்திலிருந்து இன்று(ஜூன் 15) உத்தரப் பிரதேசத்தின் ஹிண்டன் விமான நிலையத்துக்கு செல்லவிருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டது.
இதனையடுத்து, பயணிகள் காத்திருக்க அறிவுறுத்தப்பட்டனர். அதன்பின், விமானத்தில் கோளாறு சரி செய்யப்பட்டு விமானம் தாமதமாக கொல்கத்தாவிலிருந்து புறப்பட்டுச் சென்றதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். இதற்காக அவர் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தரப்பிலிருந்து பயணிகளிடம் மன்னிப்பும் கேட்டுக்கொண்டார்.
அகமதாபாத்தில் கடந்த வாரம் ஏர் இந்தியாவின் போயிங் ரக விமானம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானதிலிருந்து, விமானப் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஏர் இந்தியா மேலும் தீவிரப்படுத்தி கடைப்பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்தில் மொத்தம் 274 பேர் பலியாகினர். விமான விபத்துக்கான காரணத்தை அறிய விசாரணை நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி கேம்ப்பெல் வில்சன் ராஜிநாமா!

தொழில்நுட்பக் கோளாறு: புறப்பட்ட இடத்துக்கே திரும்பிய ஏர் இந்தியா விமானத்தால் பயணிகள் அவதி!

இண்டிகோ நிறுவனத்துக்கு முதன்மை வியூக அலுவலர் நியமனம்!

தொழில்நுட்பக் கோளாறு: அயர்லாந்திற்குத் திருப்பிவிடப்பட்ட ஏர் இந்தியா விமானம்
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


