
அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் பலியானவர்களின் உடல்களை ஒப்படைக்கும் பணி இன்றுமுதல் தொடங்கப்படுகிறது.
அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் 270-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். விமானம் தீப்பற்றி எரிந்ததால், உள்ளிருந்தோர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதனால், அவர்களை அடையாளம் காணுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனையடுத்து, உயிரிழந்தவர்களை அடையாளம்காண, அவர்களின் உறவினர்களிடம் டிஎன்ஏ மாதிரி கோரப்பட்டது.
இந்த நிலையில், இதுவரையில் சேகரிக்கப்பட்ட 32 டிஎன்ஏ மாதிரிகள் பொருந்தியுள்ளதாக அகமதாபாத் சிவில் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
மேலும், டிஎன்ஏ மாதிரிகளின் உதவியால், உயிரிழந்தவர்களில் 14 பேர் அடையாளம் காணப்பட்டு, அவர்களின் குடும்பத்தினரிடம் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதாக அகமதாபாத் சிவில் மருத்துவமனை கூடுதல் கண்காணிப்பாளர் ராஜனீஷ் படேல் தெரிவித்தார்.
டிஎன்ஏ பரிசோதனை, உடல்களை ஒப்படைக்கும் பணிகளில் மருத்துவகள், உதவியாளர்கள், ஓட்டுநர்கள் என சுமார் 600 பேர் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தனர்.
இதையும் படிக்க: சொல்லப் போனால்... சொந்த மண்ணிலேயே அன்னியரைப் போல...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.