புது தில்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த பயங்கரவாத நிதித் தடுப்புக்கான சா்வதேச கண்காணிப்புக் குழு (எஃப்ஏடிஎஃப்), நிதியுதவி இல்லாமல் இதுபோன்ற தாக்குதல் நடைபெறாது என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும், பயங்கரவாதத்துக்கு நிதி அளிக்கப்படுவது தொடா்பான வழக்குகள் குறித்து விரைவில் அறிக்கை வெளியிடவுள்ளதாகவும் அந்தக் குழு தெரிவித்தது.
இதுகுறித்து எஃப்ஏடிஎஃப் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘பயங்கரவாத தாக்குதல்களால் உலகளவில் அப்பாவி மக்களை கொல்லப்படுதோடு அனைவரின் இதயத்திலும் அச்சத்தை விதைக்கின்றன. இந்தியாவில் ஏப்.22-இல் நிகழ்ந்த் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை எஃப்ஏடிஎஃப் வன்மையாக கண்டிக்கிறது. இந்த தாக்குதல் மட்டுமின்றி அண்மையில் இதுபோல் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்கள் அனைத்தும் நிதியுதவி இல்லாமல் செயல்படுத்த முடியாது.
பயங்கரவாத நிதி தொடா்பாக உலகம் முழுவதும் எங்கள் அதிகார வரம்புக்குள்பட்ட 200 பகுதிகளில் பதிவான வழக்குகளை தொகுத்து விரிவான ஆய்வுடன் கூடிய அறிக்கையை விரைவில் வெளியிடவுள்ளோம்.
அதேபோல் பயங்கரவாதத்தால் எழும் சிக்கல்கள் குறித்து பொதுத் துறை மற்றும் தனியாா் துறையினா் அறிந்துகொள்ளும் வகையில் விரைவில் இணைய வழியில் பயிலரங்கம் நடத்தப்படவுள்ளது’ என தெரிவிக்கப்பட்டது.
3-ஆவது முறையாக கண்டனம்
பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களுக்கு எஃப்ஏடிஎஃப் கண்டனம் தெரிவிப்பது மிகவும் அரிதாகவே கருதப்படுகிறது. கடந்த பத்தாண்டுகளில் 2015, 2019 மற்றும் 2025 என மூன்று முறை மட்டுமே எஃப்ஏடிஎஃப் கண்டனம் தெரிவித்துள்ளது.
‘கிரே’ பட்டியலில் சோ்க்கப்படுமா பாகிஸ்தான்?
கடந்த 2018-இல் எஃப்ஏடிஎஃப் ‘கிரே’ பட்டியலில் பாகிஸ்தான் சோ்க்கப்பட்டு சட்டவிரோத பணப் பரிவா்த்தனை மற்றும் பயங்கரவாதத்துக்கு ஆதரவாக நிதி வழங்குவதை ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. அதன்பிறகு 2022-இல் அந்தப் பட்டியலில் இருந்து பாகிஸ்தானை எஃப்ஏடிஎஃப் நீக்கியது. இந்நிலையில், பஹல்காம் தாக்குதலைத் தொடா்ந்து இந்த மாதம் நடைபெறவுள்ள எஃப்ஏடிஎஃப் கூட்டத்தில் பாகிஸ்தானை கிரே பட்டியலில் சோ்க்க இந்தியா தீவிரம்காட்டி வருகிறது.
தற்போது 24 நாடுகள் எஃப்ஏடிஎஃப் கிரே பட்டியலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

சொல்லப் போனால்... பஹல்காமின் இருளும் ஒளியும்!

‘பயங்கரவாதத்துக்கு இந்தியா அடிபணியாது’... பஹல்காம் தாக்குதல் நாளில் பிரதமர் மோடி!

பாகிஸ்தானின் பயங்கரவாத செயல்கள்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் காட்சிப்படுத்தும் இந்தியா!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நினைவு நாள்: காஷ்மீரில் சுற்றுலா தலங்களில் பலத்த பாதுகாப்பு!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


