தேர்தல் ஆணையம் நோக்கி சென்ற எம்.பி.க்கள் தடுத்து நிறுத்தம்! சாலையில் அமர்ந்து தர்னா!கேப்டன் பொறுப்பில் இருந்து ஹர்மன்பிரீத் கவுர் விலகல்! ‘முதுகில் குத்தும் தவெக அரசுக்கு செவிலியர்கள்தான் இரையா?’ - முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்தங்கம் சவரனுக்கு ரூ. 120 குறைவுசெவிலியர்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்மதுராந்தகம்: வாக்குச்சாவடியில் இயந்திரத்தில் பழுது - வாக்குப்பதிவு நிறுத்தம்

‘செவிலியர்கள் மீதான பாசிச தாக்குதல் கொடூரத்தின் உச்சம்’ - முதல்வர் விஜய்க்கு இபிஎஸ் கண்டனம்!

செவிலியர்கள் மீதான பாசிச தாக்குதல் கொடூரத்தின் உச்சம் என்று முதல்வர் விஜய்க்கு அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

முதல்வர் விஜய் | எடப்பாடி பழனிசாமி - (கோப்புப் படம்)

Published On :

செவிலியர்கள் மீதான பாசிச தாக்குதல் கொடூரத்தின் உச்சம் என்று முதல்வர் விஜய்க்கு அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

பணிப் பாதுகாப்பு, சமவேலைக்கு சம ஊதியம் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு இடைநிலை சுகாதாரப் பணியாளா் சங்கத்தினர் சென்னையில் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் செவிலியர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தி அவர்களை கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

இந்தச் சம்பவத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமியும் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

இதுதொடர்பாக தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி அறவழியில் போராட்டம் நடத்திய செவிலியர்கள் மீது இன்றைய தவெக அரசின் காவல்துறை அரங்கேற்றியுள்ள அராஜகம் என்பது கொடூரத்தின் உச்சம்.

“பாசிசம், பாயாசம்” என்று ரைமிங் வசனங்கள் பேசிய முதல்வரின் கையில் இருக்கும் காவல்துறை, உயிர் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள செவிலியர்கள் மீது நடத்தியுள்ள பாசிச அக்கிரமத்தை எப்படி இந்த ரீல்ஸ் முதல்வர் நியாயப்படுத்தப் போகிறார்? ஆட்சிக்கு வருவது முன், இதே செவிலியர்கள் முன் நின்று உங்கள் கட்சி நிர்வாகிகள், இன்றைக்கு அமைச்சராக இருப்பவர்கள் பேசியது எல்லாம் நினைவில் இருக்கிறதா?

ஆட்சிக்கு முன் ஒரு பேச்சு, ஆட்சிக்கு பின் அதற்கு மாறான செயல் என்பது தான் மாற்றமா? தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவுவது குறித்து மக்கள் பிரச்சனையை சுட்டிக்காட்டினால் கூட ஏற்றுக்கொள்ள மனமின்றி அவதூறுகளை அள்ளி வீசும் நபராக இருக்கிறார் இன்றைய சுகாதாரத் துறை அமைச்சர்.

தனது துறையைச் சார்ந்த செவிலியர்கள் போராடுவது குறித்து ஒரு வார்த்தை பேசினாரா? செவிலியர்களிடம் வந்து பேச்சுவார்த்தை நடத்துவதைவிட அப்படி என்ன பெரிய வேலை இருக்கிறது இந்த அமைச்சருக்கு?

போராடும் இடத்தில் மின்சாரத்தை துண்டிப்பது, பேச்சுவார்தை எனக் கூறி அழைத்து சென்று கைது செய்வது என மிகவும் கீழ்த்தரமாக ஒரு போராட்டத்தை அணுகியுள்ள இன்றைய ஆச்சரியக்குறி அரசுக்கு எனது கடும் கண்டனம்.

கைது செய்யப்பட்டுள்ள செவிலியர்கள் அனைவரும் உடனடியாக விடுவிக்கப்பட்டு, அவர்கள் மீது எந்த வழக்கும் பதியாமல் இருப்பதை உறுதி செய்து, ஜனநாயக ரீதியாக அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.