அமர்நாத்தில் கூடுதல் சோதனை சாவடிகள் அமைக்கத் திட்டம்!

அமர்நாத்தில் கூடுதல் சோதனைச் சாவடிகள் அமைப்பது பற்றி..
amarnath
அமர்நாத்
Published on
Updated on
1 min read

அமர்நாத் யாத்திரைக்கு முன்னதாக கூடுதல் சோதனைச் சாவடிகளை அமைப்பதற்கான இடங்களை அடையாளம் காணுமாறு காவல்துறைக்கு அமர்நாத் வாரிய நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

38 நாள்கள் நடைபெறும் அமர்நாத் யாத்திரை ஜூலை 3 தேதி முதல் ஆகஸ்ட் 9 வரை நிகழவுள்ளது. இந்த நிலையில் அனந்த்நாத் மாவட்டத்தில் பாரம்பரிய 48 கி.மீ, பஹல்காம் பாதை,

கண்டர்பால் மாவட்டத்தில் 14 கி.மீ குறுகிய பால்டால் பாதையில் பக்தர்கள் அமர்நாத் பனிலிங்கத்தை தரிசனம் செய்வார்கள்.

முதல் தொகுதி பக்தர்கள் யாத்திரை தொடங்குவதற்கு ஒருநாள் முன்பு பகவதி நகரிலிருந்து காஷ்மீருக்குப் புறப்படுவார்கள். இந்த நிலையில், அனைத்து அதிகாரிகளும் குறிப்பாக இரவு நேரங்களில் சோதனைச் சாவடிகளை வலுப்படுத்த அறிவுறுத்தப்பட்டனர்.

இதுதொடர்பாக ஜம்மு-சம்பா-கதுவா எல்லைப் பகுதியின் துணை ஆய்வாளர் ஷிவ் குமார் சர்மா,

அமர்நாத் யாத்திரைக்கு முன்னதாக, பக்தர்களின் பாதுகாப்பிற்காக ஜம்மு, சம்பா, கதுவா ஆகிய எல்லை மாவட்டங்களில் கூடுதல் சோதனைச் சாவடிகளை அமைப்பதற்கான இடங்களை அடையாளம் காணுமாறு காவல்துறையினரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அடிப்படை முகாம், அதைச் சுற்றியுள்ள பல்வேறு காவல்துறை மற்றும் துணை ராணுவப் படைகளின் பாதுகாப்பு தணிக்கையின் போது ​​காவல்துறை அதிகாரிகளுக்கு இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

ராம் மந்திர் புராணி மண்டி, கீதா பவன் பரேட், பகவதி நகரில் உள்ள அடிப்படை முகாம், பல்வேறு வழித்தடங்கள் மற்றும் நெடுஞ்சாலை ஆகியவற்றில் சர்மா பாதுகாப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அனைத்து ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரிகளும் விழிப்புடன் இருக்கவும், இரவு நேரங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com