தேர்தல் பிரசாரத்துக்காகப் பயன்படுத்தப்படும் கங்கை நதி! காங்கிரஸ் குற்றச்சாட்டு

கடந்த 11 ஆண்டுகளாக தேர்தல் பிரசாரத்துக்காக கங்கை நதி தூய்மையை பிரதமர் பயன்படுத்தி வருவதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு
தேர்தல் பிரசாரத்துக்காகப் பயன்படுத்தப்படும் கங்கை நதி! காங்கிரஸ் குற்றச்சாட்டு
Published on
Updated on
1 min read

தேர்தல் பிரசாரத்துக்காக கங்கை நதி தூய்மையை பிரதமர் நரேந்திர மோடி பயன்படுத்தி வருவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

பிகாரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரமதர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார். மேலும், நிறைவடைந்த திட்டங்களையும் தொடக்கி வைத்தார். அவற்றில் கங்கை நதியை பாதுகாத்தல் மற்றும் புனரமைத்தலுக்காக ரூ.1800 கோடி மதிப்பில் நமாமி கங்கா திட்டத்தின்கீழ் 6 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களையும் தொடக்கி வைத்தார்.

இந்த நிலையில், கடந்த 11 ஆண்டுகளாக கங்கை நதியை தேர்தல் பிரசாரமாக மாற்றப்பட்டதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம் சாட்டினார்.

இதுகுறித்து, அவர் தனது எக்ஸ் பக்கத்தில், விளம்பரங்களை மட்டுமே விரும்பும் பிரதமர் நரேந்திர மோடி, மீண்டும் பிகாருக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார். இந்த பயணத்தில் கங்கை மாசுபாடு குறித்தும் பிரதமர் தேர்தல் பிரசாரம் நடத்துவார். ஆனால், உண்மையில் கடந்த 11 ஆண்டுகளில் கங்கை சுத்திகரிப்பு என்பது ஒரு தேர்தல் பிரசாரமாகவே மாறிவிட்டது.

ஒவ்வொரு தேர்தலுக்கு முன்னதாகவும் இதனை அவர்கள் நினைவு கூர்ந்து விடுகின்றனர். பிகாரில் மட்டுமல்ல, நாடு முழுவதுமே கங்கை மாசுபட்டு உள்ளது.

கங்கை தூய்மை பிரசாரம் என்ற பெயரில் தொடங்கப்பட்ட பெரும்பாலான திட்டங்கள், ஊழல் மையமாகவே நிரூபிக்கப்பட்டுள்ளன. தேசிய பசுமை தீர்ப்பாயமே, பாட்னா மற்றும் பிகாரில் கங்கை மாசுபாட்டின் மோசமான நிலையை அம்பலப்படுத்தியுள்ளது.

பிகாரில் எத்தனை போலி அறிவிப்புகளை வெளியிட்டாலும் சரி, இலவச விளம்பரத்துக்காக எத்தனை ரிப்பன்களை வெட்டினாலும் சரி, உண்மையில் பிகாரில் சாமானிய மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய இரட்டை இயந்திர அரசு தவறி விட்டது.

பிகாரில் பின்தங்கிய வகுப்பினருக்கு எதிரான ஒடுக்குமுறை உச்சத்தில் உள்ளது; சட்டம்-ஒழுங்கு நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. குற்றவாளிகள் கட்டுப்பாடின்றி திரிகின்றனர்; சாமானிய மக்கள்தான் உதவியின்றி இருக்கின்றனர்.

ஒவ்வொரு நாளும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான வன்முறை செய்திகள் வருகின்றன. இளைஞர்களுக்கு மாநிலத்தில் எந்த வேலைவாய்ப்பும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: பாதுகாப்பு மீறல்களில் ஏர் இந்தியா! விமானப் போக்குவரத்து இயக்குநரகம் எச்சரிக்கை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com