ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் போராட்டம் வலுக்கும்: மமதா பானர்ஜிநடுவானில் துபை விமானத்தில் கத்திக்குத்து! தாக்கப்பட்ட விமானி இந்தியரா?தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜகவுக்கு தாரைவார்த்தவர் ஞானேஷ் குமார்: காங்கிரஸ்3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

அசாம் காங்கிரஸுக்கு சாதகமாக இஸ்லாமிய நாடுகளின் சமூக வலைதள கணக்குகள்: முதல்வர் குற்றச்சாட்டு

அசாம் காங்கிரஸ் கமிட்டியின் மீது அம்மாநில முதல்வர் குற்றம்சாட்டியுள்ளதைப் பற்றி...

அசாம் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வாஸ் சர்மா

Published On :

அசாம் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக, பல்வேறு இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்த 5,000-க்கும் அதிகமான சமூக வலைதள கணக்குகள் செயல்படுவதாக அம்மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வாஸ் சர்மா குற்றம்சாட்டியுள்ளார்.

பத்திரிக்கையாளர்களுடன் இன்று (ஜூன் 20) நடைபெற்ற சந்திப்பில் பேசிய அசாம் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வாஸ் சர்மா, சுமார் 47 நாடுகளைச் சேர்ந்த 5,000-க்கும் அதிகமான சமூக வலைதள கணக்குகள், அம்மாநில காங்கிரஸ் கட்சியின் குறிப்பிட்ட தலைவருக்கு சாதகமாகச் செயல்படுவதாகக் கூறியுள்ளார்.

இதில், பெரும்பாலான கணக்குகள் வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து செயல்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் பேசியதாவது:

”அந்த வலைதள கணக்குகள் அனைத்தும் ராகுல் காந்தி அல்லது காங்கிரஸ் கட்சியின் பதிவுகளில் எந்தவொரு ஈடுபாடும் காட்டவில்லை. அவை, ஒரு குறிப்பிட்ட தலைவர் மற்றும் அசாம் மாநில காங்கிரஸின் செயல்பாடுகளின் மீது மட்டுமே கவனம் செலுத்தியுள்ளன” என்று அவர் பேசியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அந்தக் கணக்குகள், பாலஸ்தீனம், ஈரான் ஆகிய நாடுகளையும் மற்றும் வங்கதேசத்தின் இடைக்காலத் தலைவர் முஹம்மது யூனுஸ் என்பவரையும் ஆதரித்து இஸ்லாமிய அடிப்படைவாதப் பதிவுகளை வெளியிட்டு வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தச் சந்திப்பில், முதல்வர் சர்மா, அந்த காங்கிரஸ் தலைவரின் பெயரைக் குறிப்பிடவில்லை என்றாலும், அவர் குறிப்பிடுவது கடந்த சில நாள்களுக்கு முன்பு அசாம் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்ட கௌரவ் கோகோய்தான் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

வரும் 2026 ஆம் ஆண்டு அசாம் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், முதல்முறையாக அம்மாநில அரசியலில் வெளிநாடுகளின் ஈடுபாடு அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இது தொடர்பாக மத்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டதாகவும், இது தேசிய பாதுகாப்பு தொடர்பான விவகாரம் என்றும் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வாஸ் சர்மா கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.