இந்தியாவின் சாதனை மட்டுமல்ல பெருமைக்குரிய விஷயம்: கட்கரி

உலகம் முழுவதும் கொண்டாடப்படும் யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது..
big achievement, matter of pride
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
Published on
Updated on
1 min read

உலகம் முழுவதும் கொண்டாடப்படும் யோகா தினம் இந்தியாவின் மிகப்பெரிய சாதனை மட்டுமல்ல பெருமைக்குரிய விஷயம் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

நாக்பூர் நகராட்சி, மாவட்ட நிர்வாகம் மற்றும் மத்திய கலாசார அமைச்சகத்தின் யஷ்வந்த் அரங்கில் சர்வதேச யோகா தினத்தையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் நிதின் கட்கரி பங்கேற்றார்.

செய்தியாளர்களிடம் பேசிய கட்கரி,

ஒவ்வொரு நாளும் யோகா பயிற்சி செய்வது ஒருவரின் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.

உலகம் முழுவதும் பிரமாண்டமாகக் கொண்டாடப்படும் சர்வதேச யோகா தினத்திற்கான முன்மொழிவைப் பிரதமர் நரேந்திர மோடி ஐ.நா.விடம் வழங்கியதில் நான் மகிழ்வடைகிறேன். இது எங்களுக்கு ஒரு பெரிய சாதனை மற்றும் பெருமைக்குரிய விஷயம் என்று அவர் கூறினார்.

சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் யோகா செய்தார், மேலும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com