பிகாரில் பேரணிகளுக்கு ரூ.20,000 கோடி செலவழித்த பாஜக: தேஜஸ்வி குற்றச்சாட்டு!

ரூ.20 ஆயிரம் கோடி செலவிடப்பட்டுள்ளதாக ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.
 PM's rallies in Bihar
தேஜஸ்வி யாதவ் கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

பிகாரில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றிய பேரணிகளுக்கு இதுவரை ரூ.20 ஆயிரம் கோடி செலவிடப்பட்டுள்ளதாக ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக தேஜஸ்வி யாதவ் கூறியதாவது,

2014 முதல் பிகாரில் மோடியின் பேரணிகளுக்கு ஒவ்வொன்றும் ரூ. 100 கோடி செலவாகியுள்ளதாகவும், இதுவரை இதுபோன்ற 200 பொதுக்கூட்டங்கள் நடந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

மொத்தம் ஐந்து தேர்தல்கள் (3 மக்களவை, 2 சட்டப்பேரவை தேர்தல்) என இந்தக் காலகட்டத்தில் செலவிடப்பட்ட மொத்தத் தொகை ரூ. 20 ஆயிரம் கோடியாகும். இவைகளில் பல கூட்டங்கள் அரசால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை சிவான் மாவட்டத்திற்கு வருகை தந்திருந்தார். இந்தாண்டு பிரதமர் மாநிலத்திற்கு மேற்கொண்டு ஐந்தாவது வருகை இதுவாகும். ஒரே மாதத்திற்குள் இரண்டாவது வருகை, அவர் பிரதமராகப் பொறுப்பேற்றதிலிருந்து இதுவரை 51வது வருகை என்றும் கூறப்படுகிறது.

பொதுப் பணத்தைப் புத்திசாலித்தனமாகத் தனது சொந்த விளம்பரத்திற்காகப் பயன்படுத்துபவரை நாம் என்னவென்று அழைப்பது? நேர்மையுள்ள மனிதராக நடிக்கிறார்?. இவர் மக்களின் பணத்தைக் கொள்ளையடிக்கிறாரே தவிர, மக்களின் உதவியாளர் அல்ல..

இன்னும் சில மாதங்களில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆர்ஜேடியை எதிர்கொள்ளும் பாஜகவுக்கு முழு பலத்துடன் பதிலடி கொடுத்தது.

பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைரும், துணை முதல்வருமான சாம்ராட் சௌத்ரி, "தீவார்". படத்தின் பிரபலமான வரியான "மேரா பாப் சோர் ஹை" (என் தந்தை ஒரு திருடன்) மூலம் யாதவைத் திட்ட முயன்ற ஒரு நாளுக்குப் பிறகு, ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத்தின் ஊழல் களங்கத்தை வெளிப்படையாகக் குறை கூறியதையடுத்து, பாஜக-ஆர்ஜேடி இருவருக்கும் சுவரொட்டிப் போர் நடைபெற்று வருகின்றது.

ஆர்ஜேடியின் அந்த போஸ்டரில் தந்தை-மகன் எருமை மீது சவாரி செய்வதைக் காட்டும் கேலிச்சித்திரத்திற்கு அருகில் வண்ணமயமான வாசகம் எழுதப்பட்டுள்ளது. இது கால்நடை தீவன ஊழலைப் பற்றிய குறிப்பிடப்படுவதாக உள்ளது.

கால்நடை தீவன ஊழலில் தண்டனை பெற்றதால், முன்னாள் முதல்வரும் முன்னாள் மத்திய அமைச்சருமான லாலு பிரசாத் யாதவ் தேர்தலில் போட்டியிடத் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com