நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்: மகளை அடித்துக் கொன்ற தந்தை!

நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்தற்காக மகளை அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Man beats daughter to death
அடித்துக் கொலை
Updated on
1 min read

மகாராஷ்டிரத்தின் சாங்லி மாவட்டத்தில் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்தற்காக மகளை அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அட்பாடி தாலுகாவில் உள்ள நெல்கரஞ்சி கிராமத்தில் இந்த சம்பவம் சனிக்கிழமை இரவு நடைபெற்றதாக போலீஸார் ஒருவர் தெரிவித்தார்

தோண்டிராம் போசலே (45), பள்ளி முதல்வராக பணியாற்றி வருகிறார். இவரின் மகள் சாதனா(16) மருத்துவர் ஆகவேண்டும் என்ற கனவில் நீட் தேர்வை எழுதியுள்ளார். ஆனால் குறைந்த மதிப்பெண்கள் எடுத்ததால் அவரின் தந்தை போசலே கோபமடைந்துள்ளார். இருவருக்குமிடையே வாக்குவாதம் நிகழ்ந்துள்ளது.

ஒருகட்டத்தில் மாவு தயாரிக்கப் பயன்படுத்தும் கல் அரவை இயந்திரத்தின் மரக் கைப்பிடியைப் பிடித்து, தனது மனைவி, மகன் முன்னிலையில் மகளை பலமாகத் தாக்கியுள்ளார்.

பலத்த காயமடைந்த 16 வயது சிறுமியை சாங்லியில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இளம்பெண், சிகிச்சையின் போது உயிரிழந்தார்.

பிரேதப் பரிசோதனை அறிக்கையில், பலத்த காயங்களால் அவர் இறந்ததாகத் தெரியவந்துள்ளதாக அட்பாடி காவல் நிலைய மூத்த ஆய்வாளர் வினய் பாஹிர் தெரிவித்தார்.

சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில், குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com